Kumbam: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. சந்திர கிரகணத்துக்குப் பிறகு கொட்டும் பணம்
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கும்ப ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம் (Kumbam Rasi Palan)
கும்ப ராசியில் 4 கிரகங்களின் கூட்டணி அமைகிறது. சூரிய பகவான் உங்கள் ராசியில் அமர்ந்திருப்பது யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். பூர்வ புண்ணியாதிபதி புதன் ராசியில் வந்து அமர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 10 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் ராசியில் வந்து அமர்ந்திருக்கிறது நல்ல அமைப்பாகும்.
யோகம்
ராசியின் 2 ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சமாக அமர்ந்திருக்கிறார். அவருடன் சனி பகவான் சேர்ந்திருப்பது மிகப்பெரிய யோக நிலையாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். 7 ஆம் இடத்தில் சந்திரன், கேது சேர்ந்திருக்கிறது. கிரகணம் ராசிக்கு 7 ஆம் இடத்தில் நடைபெறுகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக சித்தர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
தொழில்
கிரகணம் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கிரகணம் முடிந்தபின் கும்ப ராசிக்கு மிகப்பெரிய நன்மைகள் காத்திருக்கிறது. தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கம்பியூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சிகள் கிடைக்கும்.
பணம் கொட்டும்
நிறைய பொருளாதார தடைகள் இதுவரை இருந்திருக்கும். இப்போது சுக்கிரனும், சனியும் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நல்ல காசு பண வரவு இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் கூடி வரும். திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, சீமந்தம், சதாபிஷேகம் என அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
பூர்வீக சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். அதிகார வேலைகள் கிடைக்கும். சகோதரனுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு திருமணமாகும் யோகம் உண்டு. வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும். நல்ல முன்னேற்றம் தரும் காலகட்டமாக இருக்கும்.
கிரகணத்திற்குப் பிறகு தொழில், வியாபாரம், நல்ல வேலை, படிப்பு என அனைத்திலும் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சித்தர் வழிபாடுகள், மந்திரங்களை உச்சரிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications