Chandra Grahan: மீன ராசிக்கு சந்திர கிரகணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. விபரீத மாற்றங்கள் காத்திருக்கு
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மீன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்படகூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம் (Meenam Rasi Palan)
மீன ராசி என்பது காலபுருஷனுடைய நிறைவான ராசி. இந்த ராசியில் பிறந்த பலருக்கும் மோட்சம் உறுதி என்று முன்னோர்கள் கூறுகின்றனர். மீன ராசியினருக்கு ராசிக்கு 6 ஆம் இடமான சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடைபெறுகிறது. 6 ஆம் இடம் என்பது சத்ரு, ரோகம், ருணம் ஸ்தானம். உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வரவு ஏற்படும்.
திருமண யோகம்
திருமணம் உறுதியாகாத மீன ராசியினருக்கு திருமணம் உறுதியாகும். மீன ராசியில் சுக்கிர பகவான் உச்சமாக அமர்ந்திருக்கிறார். உடன் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். சதுர்த்தம கேந்திரத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். ராசிக்கு 6 ஆம் இடத்தில் சந்திரன், கேது அமர்ந்திருக்கின்றனர். ராசிக்கு 12 ஆம் இடத்தில் புதன், செவ்வாய், ராகு, சூரியன் ஆகிய 4 கிரகங்கள் அமர்ந்திருக்கின்றனர்.
பண வரவு கொட்டும்
காசு, பணம் வருவதில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். முதலீடுகள் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். பங்குச்சந்தை, அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய எண்ணங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு யோகம், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உடம்பின் கழிவு உறுப்புகள், கால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
சொத்துகள் வாங்கும் நேரம்
லலிதா சஹஸ்ஹரநாமத்தை தினந்தோறும் அமர்ந்து சொல்வது, மீனாட்சி பஞ்சரத்தினத்தை சொல்லி வந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். படிக்கக்கூடிய மாணவர்கள் கல்வியில் அற்புதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிதாக வீடு, சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வீடு, நிலத்தை விற்கும் யோகம் உண்டாகும்.
வெளிநாடு யோகம்
வெளிநாட்டு பயணங்கள் கைகூடி வரும். கடல் கடந்து வெளிநாடு செல்வது, வெளிநாட்டில் வேலை, படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவை அமையும். பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெயர் கெடும் சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
அம்மாவுடைய உடல்நலம், தந்தையுடைய உடல்நலத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல வேலைவாய்ப்பு, பொருளாதார உயர்வு உண்டாகும். கிரகண காலகட்டமான இன்று இரவு 7.53 வரை ஓம் மீனாட்சியே போற்றி என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் சகலவித யோகங்களும் உண்டாகும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications