Rasi Palan This Week: புதன், சுக்கிரன் அருளால் மகர ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. மாற்றம் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-rasi-palan-what-kind-of-benefits-that-magaram-capricorn-will-get-from-december-15-to-21

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.

மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. சனியால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். யோகத்தையும், சந்தோஷத்தையும் அனுகூலத்தையும் பெறும் காலகட்டம்.

தடைகள் நீங்கும்

கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடங்களிலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த வேலைவாய்ப்புகள், தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பு அனைத்தும் சரியாகும் நேரமாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்

மாற்றம், முன்னேற்றம்

பிள்ளைார்பட்டி பிள்ளையாரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. உயரமான இடங்கள், வழுக்கலான இடங்களில் செல்லும் போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மகர ராசியினருக்கு வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம், மனை மாற்றம் உண்டாகும்.

புதன், சுக்கிரனால் திடீர் அதிர்ஷ்டம்

லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் இருப்பதால் நண்பர்கள், மூத்தவர்கள், உறவினர்கள் மூலமாக திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிடித்த வரன்கள் கண்டிப்பாக அமையும். காதல் கைகூடும். நிறைய பேர் வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். ஆஸ்திரேலியா, யுகே செல்லும் வாய்ப்புகள் வந்து சேரும். பெரிய வாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு தாரமாக வரும். பங்குச்சந்தையில் டிரேடிங் செய்பவர்கள், பெண்களுக்கு அற்புதமான வாரமாக இருக்கும்.

வழிபாடு

ஆண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரிதாக எந்த பாதிப்புகளும் ஏற்படாது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதாரமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. பைரவர் வழிபாடு உங்களுக்கு மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+