Rasi Palan This Week: மகர ராசிக்கு பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகும்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம் (Magaram Rasi Palan)
மகர ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் திடீர் அதிர்ஷ்டம், ஏற்றம் ஏற்படும். சுபவிரயம் ஏற்படும் யோகம் உண்டாகும். மகர ராசியினர் இருக்கும் வீட்டில் நன்மைகள் ஏற்படும். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், தொலைதூரப் பயணங்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
புதிய தொழில்
லாப ஸ்தானத்தில் புதன், 3 ஆம் இடத்தில் சனி இருக்கிறார். புதிய தொழில், உத்தியோகம், வியாபாரம், டிரேடிங், ஜெராக்ஸ் கடை, ஸ்டேசனரி அமைக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கொழுப்பு, சுழுக்கு தொடர்பான விஷயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நிறைய செலவுகள் ஏற்படும். நிறைய சேமிப்புகள் கரையும் வாய்ப்புள்ளது. புதிய தொழில், விரிவுபடுத்துவது போன்ற விஷயத்துக்காக நல்ல காரியங்களைச் செய்வீர்கள்.
செல்வாக்கு கூடும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மனக்கஷ்டம் என்று இருந்த அமைப்பு எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். யோகம், அனுகூலம், நம்பிக்கை ஏற்படும் காலகட்டம். உத்வேகத்துடன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கவனம்
பேருந்து நிலையங்கள், பெரிய ரயில்வே ஸ்டேஷன், ஜங்ஷன் போன்ற பகுதிகளில் பயணிக்காமல் இருப்பது நல்லது. விருதுகள், அங்கீகாரம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் வீட்டுக்கு வந்து பரிசு கொடுக்கும் யோகம் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை.
வழிபாடு
மகர ராசியினருக்கு உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல ஏற்றமும், லாபமும் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது வழிபாடு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். கேது காயத்ரியை ஜெபித்து வருவது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
-
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications