Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் மகர ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram rasi palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமதிபதியான சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். உங்களுடைய ராசிநாதனை அஷ்தமனப்படுத்தினாலும், உங்களுக்கு பெரிய சோதனைகள் எதுவும் இந்த மாதத்தில் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இந்த காலகட்டத்தில் உண்டாகும். எதிர்பாராத மன மாற்றம் ஏற்படும்.
தன்னம்பிக்கை
உங்களை எதிர்க்கக்கூடிய நபர்களுக்கும் மன மாற்றம் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். உங்களை எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள், முதுகில் குத்துபவர்கள் மனம் மாறி உங்களை விட்டு விலகுவார்கள். நன்மை மிகுந்த காலகட்டமாக இருக்கும். 3 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் உற்சாகம், தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி, தலைமை தாங்கக்கூடிய பக்குவம், மனோதிடம் உண்டாகும்.
வாய்ப்புகள்
கடந்த 5 ஆண்டுகளாக நன்றாக இல்லை என கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் மாறும். உங்களுக்கான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அதற்கான விஷயங்கள் மாத இறுதிலேயே வந்து சேரும் அமைப்பு உள்ளது. புகழ், கீர்த்தி கிடைக்கும். இசைத் துறை, நடனக் கலைஞர்கள், நாடகத் துறை, நடிப்புத் துறை, எழுத்து சார்ந்த விஷயங்களில் புகழ் அடைய வேண்டும் நினைப்பவர்கள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
நன்மை
சோஷியல் மீடியாக்களில் முன்னேறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு பங்குனி மாதத்தில் வருமானத்துடன் கூடிய புகழ் வந்து சேரும். அவரவர் வயதுக்கு ஏற்பட கும்ப ராசியினருக்கு நிறைவுகள், நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். எல்லா விஷயங்களையும் எளிதில் சமாளிக்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காண்பீர்கள். தொட்டது துலங்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications