Magaram Rasi Palan: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது.. செட்டிலாகப் போறீங்க
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன்14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் மகர ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி, லக்கினக்காரர்களுக்கு ராஜயோகம் கொடுக்கும் கிரகம் சுக்கிர பகவான். 7 ஆம் இடத்தில் தற்போது சுக்கிரன் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் நல்ல பாக்கியம், வெற்றி, நல்ல செய்தி கிடைக்கும் காலகட்டமாக இருக்கம். திருமணம் சார்ந்த சுப காரியங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் யோகம் உள்ளது. நினைத்தது அனைத்தும் நடக்கும் யோகம் உண்டு. கூட்டாளிகள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

காதல் திருமணம்
கூட்டுத் தொழில் தொடங்கும் யோகம், அதில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் யோகம் உள்ளது. நிறைய பேருக்கு திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். காதலில் இருப்பவர்களுக்கு காதல் திருமணம் கைகூடும். அதன் மூலம் நல்ல பாக்கியம் கிடைக்கும். சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். நீங்கள் யாரென்று மற்றவர்களுக்கு காட்டும் நேரமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் நன்றாகப் படிக்கக்கூடிய தன்மை உண்டாகும். குழந்தைகளுக்கு நல்ல வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொகுசாக வாழக்கூடிய சூழல் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்கும் எண்ணங்கள் தோன்றும். பணம் இருந்து வீடு வாங்குவதில் தடைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடன் கிடைக்கும் யோகம்
10க்கு உரியவர் சுக்கிரன். தொழிலைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நன்றாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய கிளைகளை உருவாக்குவீர்கள். இனி அத்தனை முயற்சிகளும் வெற்றி அடையும். குருவின் நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை சுக்கிரன் பயணிப்பதால் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். தொழிலுக்காக கடன் வாங்குவது, வீட்டுக்காக கடன் வாங்குவது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவற்றை செய்வீர்கள்.
பயணம்
ஆகஸ்ட் 24 முதல் பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது தனம் பற்றிய சிந்தனைகள், குடும்பம், வாக்கு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சனி 9 ஆம் இடத்தைப் பயணிப்பதால் பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். ஒப்பந்தம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எழுத்து, கதை, கட்டுரை போன்றவை அற்புதமாக இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் சுக்கிரனும், புதனும் இணைந்து ராசியைப் பார்க்கும்போது அறிவூப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்வீர்கள்.
வழிபாடு
ஆவணி மாதம் 31 ஆம் தேதி சுக்கிர பகவான் ஜெயந்தி தினத்தன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரத்தை சாற்றி 6 நெய்விளக்கு தீபமேற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications