Rasi Palan This Week: குருவால் அதிர்ஷ்டம் பெறும் மகர ராசி.. பொறுமை ரொம்ப அவசியம் பாஸ்

Subscribe to Oneindia Tamil

Magaram Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Magaram rasi palan]

magaram-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-from-march-9-to-15

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான அனைத்து விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் ஏற்படும். புதிய விரயம் ஏற்படும். சுப விரயமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக, படிப்பு ரீதியாக இருந்த சங்கடங்கள் எல்லாம் தீரும்.

நிதானம் அவசியம்

எதிர்பார்க்காத ஏற்றம், நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

பிரச்சனைகளில் நிவர்த்தி

பழைய பிரச்சனைகள், பஞ்சாயத்துகள், கேஸ், செட்டில்மென்ட், ஆரோக்கியத்தில் பாதிப்புகள் போன்றவை வந்திருக்கும். நிறைய பேருக்கு நண்பர்களால் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். தேவையில்லாமல் பேசுவது போன்றவை உண்டாகும். இந்த அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தியாகும் நல்ல காலகட்டம். பல பிரச்சனைகள், அழுத்தங்கள் நிவர்த்தியாகும்.

குரு பார்வை

குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். குரு பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்துக்கு இருப்பதால் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மீண்டும் அந்தப் பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்து வந்த தேவையில்லாத சஞ்சலங்கள் எல்லாம் நீங்கும். வாக்குவாதம் நீங்கும். மன வருத்தம் இருந்தால் நீங்கும். வர வேண்டிய பணங்கள் வந்து சேரும் காலகட்டம்.

முதலீடுகள்

குடும்பத்தினருக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். புதிய முதலீடுகள் கிடைக்கும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது, புதிய முதலீடுகளைச் செய்வது என பிளாண் பண்ணி செய்வீர்கள். நிறைய தெய்வத் தலங்களுக்குச் சென்று வரும் யோகம் வரும் 12 ஆம் தேதி முதல் உண்டு.

முயற்சிகளில் வெற்றி

உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மன ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் நீங்கும். முயற்சிகள் நன்றாக இருப்பதால் வண்டி, வாகனம் வாங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். திடீர் வருமானம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக பல காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

வழிபாடு

எல்லா விதமான ஏற்றமும், நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். முதுகுத் தண்டுவடம், கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய புதன் வழிபாடு, கணபதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+