மார்ச் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் துல்லிய கணிப்பு
மார்ச் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்களில் கவனமாக இருப்பது அவசியம்.
சென்னை: சந்திரன் ஒருவரின் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்யும் சந்திராஷ்டமம் ஏற்படும். சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மார்ச் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம்
மார்ச் 04ஆம் தேதி இரவு 06.20 மணி முதல் மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் செயல்களிலும் நிதானம் அவசியம் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.

ரிஷபம்
மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி முதல் மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் வேகத்தை தவிர்க்கவும்.

மிதுனம்
மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் விழிப்புணர்வு அவசியம்.

கடகம்
மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணி முதல் மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம்.

சிம்மம்
மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணி முதல் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை மவுன விரதம் இருப்பது நல்லது.

கன்னி
மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 04.43 மணி முதல் மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமும் நிதானமும் தேவை. புதிய முடிவுகளை தள்ளி வைக்கவும். பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம்.

துலாம்
மார்ச் 18ஆம் தேதி மாலை 05.22 மணி முதல் மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். தொழில் வியாபாரங்களில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும்.

விருச்சிகம்
மார்ச் 21ஆம் தேதி காலை 06.08 மணி முதல் மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும். பேச்சிலும் செயலிலும் இரண்டு நாட்களுக்கு நிதானம் அவசியம்.

தனுசு
மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணி முதல் மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.

மகரம்
மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணி முதல் மார்ச் 28ஆம் தேதியன்று அதிகாலை 01.20 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் செயல்களில் விழிப்புணர்வும் அவசியம். வண்டி வாகன போக்குவரத்தில் கவனமும் நிதானமும் தேவை.

கும்பம் ராசி
மார்ச் 02 மாலை 4.29 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மார்ச் 28ஆம் தேதி அதிகாலை 01.20 மணி முதல் மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் வாகன போக்குவரத்திலும் நிதானம் தேவை.

மீனம் ராசி
மார்ச் 02ஆம் தேதி மாலை 04.29 மணி முதல் மார்ச் 04ஆம் தேதி மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications