விருச்சிகத்துக்கு பொன்னான காலம் ஆரம்பம்.. பணம் நிரம்பி வழியும்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
மார்ச் மாத பலன்: மார்ச் மாதத்தில் மீன ராசியில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் ஆகிய நால்வர் மீனத்தில் எழுந்தருளப் போகின்றனர். அந்த வகையில், மார்ச் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 5 ஆம் வீட்டில் ஏற்கனவே நான்கு கிரகங்கள் இந்த மாதம் உச்சம் பெறுகின்றனர். 7க்குரிய சுக்கிரன் ராகுவோடு உச்சம் பெறுகிறார். அதே நேரத்தில் 7 ஆம் வீட்டில் குரு பகவான் இருக்கிறார். கணவன், மனைவி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சச்சரவும் ஏற்படாது. பிரிந்தவர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இனிமேல் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கும்.

5 ஆம் வீட்டில் 4 கிரகம் இருப்பதால் நீங்கள் வாழ்க்கையை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். இந்த மாதத்தில் தினந்தோறும் உங்களுக்கு கையில் பணம் விளையாடும். 2 ஆம் வீட்டில் இருக்கும் குரு உங்களுக்கு கொட்டிக் கொடுப்பார். குருவே உங்களுக்குத் துணையாக இருப்பார். குருவின் தீர்க்கமான ஆசிர்வாதத்தை பெற்றவர்கள் என்பதால் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது.
என்ன வேண்டுமோ அதை அனைத்தையும் குரு பகவான் செய்து தருவார். புதிய நிறுவனம் தொடங்க, தொழில் தொடங்க சிறந்த காலகட்டமாக இருக்கும். மார்ச் மாதத்தில் புதிய விஷயங்கள் உங்களை வந்து சேரும். நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி சனி 5 ஆம் வீட்டில் வருவதால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். உணவுப் பொருள்கள், பேக்கரி தொழில், மடம், கோயில் போன்ற அனைத்து விஷயங்களையும் தொடங்கலாம். மார்ச் மாதம் முழுவதும் பண மழை கொட்டும். மார்ச் 29 ஆம் தேதி சனி வருவதால் தொட்ட காரியங்கள் துலங்கும்.
மாணவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். வெற்றி என்பது உறுதிப்படும். அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய காலகட்டம் என்பதால் அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. லக்னாதிபதியும், ராசியாதிபதியும் 8 ஆம் இடத்தில் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். கடன் சுமை, நோய் சுமை, குடும்பப் பிரச்சனையில் இருந்து வெளியில் வருவது நல்லது. பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. 5 ஆம் அதிபதி, 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆவதால் சாதகமான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
நவக்கிரகத்தில் சூரிய பகவானை வழிபடுவது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சளி, தும்மல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயங்களில் அநேகமான அனுகூலங்கள் கிடைக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் செய்வீர்கள். அனுகூலமான காலகட்டமாக இருக்கும், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவீர்கள்.
கூட்டுத் தொழிலில் இருந்து தைரியமாக வெளியில் வரலாம். சுபகாரியங்கள் நடக்கும். திருமணம், குழந்தை, வீடு, நிலம், வண்டி, பண்ணை வீடு போன்ற அனுகூலங்கள் உண்டு. விருச்சிக ராசிக்காரர்கள் சுற்றுலாத் தலங்களில் இடம், வீடு வாங்குவது நல்லது. இனிமேல் அனைத்துவிதமான நல்ல விஷயங்களும் உங்களுக்கு நடக்கும். சூரிய பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
-
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications