Kanni Rasi Palan: புதசுக்கிர யோகத்தால் கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 5 விதமான பலன் கன்ஃபார்ம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கன்னி ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் சிம்ம ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
கன்னி
கன்னி ராசி மற்றும் லக்னத்தினருக்கு ராசியாதிபதி புதன் பகவான் தன ஸ்தானாதிபதி சுக்கிர பகவானோடு சேர்ந்து புதன்சுக்கிர யோகத்தோடு மார்கழி மாதம் தொடங்கியிருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். எந்த விஷயத்தை நடத்திக் காட்ட வேண்டுமோ, ஜெயித்துக் காட்ட வேண்டுமோ அந்த விஷயங்கள் எல்லாம் நிறைவறும் மாதமாக இருக்கும்.
தேவைகள் பூர்த்தியாகும்
உங்களுடைய ராசிக்கு தன ஸ்தானதிபதியாக உள்ள குரு பகவான் புதன் பகவானோடு சேர்ந்து புதசுக்கிர யோகத்துடன் விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பதால் வேண்டும் என்பது கிடைக்கும் யோகம் ஏற்படும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்கு உபஜெய ஸ்தானத்தில் தன காரகன் குரு இருப்பதால் தனம், வன, செல்வம், சொத்து, சுகம் சம்பந்தப்பட்ட பாக்கியங்கள் கிடைக்கும்.
குபேர சம்பத்துக்கள்
உங்களுக்கு சேரக்கூடிய செல்வம், புகழ் அனைத்தும் நேர்மையான வகையில் கிடைக்கும் அமைப்பு உள்ளது. கடந்த காலங்களில் முயற்சி செய்த விஷயங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நேர்மையாக நடந்தேறும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்கு 6 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் லட்சுமி ஸ்தானமாக அமையும். அதனால், குபேர சம்பத்துக்கள் கிடைக்கும். குதூகலமாக இருப்பீர்கள்.
வழிபாடு
பிரிந்து சென்றவர்கள் குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டு. 9 கிரகங்களில் 5 கிரங்கள் நல்ல நிலையில் இருப்பதால் 5 கிரகங்கள் மூலம் 5 விதமான நன்மைகள் கிடைக்கும் மாதமாக இந்த அமையும். கன்னி ராசியினருக்கு நன்மைகள் தடையில்லாமல் இருக்க குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். அதேபோல, குலதெய்வ விருச்சத்துக்கு வழிபாடு செய்வது, தின தேவதை, வார தேவதை, மாத தேவதை, வருட தேவதை சம்பந்தப்பட்ட வழிபாடுகளைச் செய்வது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications