Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு அஷ்டம சனியிலும் அதிர்ஷ்டம்.. குரு அருள் இருப்பதால் அச்சம் வேண்டாம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சிம்ம ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் சிம்ம ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு தற்சமயம் அஷ்டமசனி நடந்து கொண்டிருப்பதால் சிறு சிறு கஷ்டங்கள் இருக்கும். இருப்பினும், இந்த மார்கழி மாதம் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் மாதமாக இருக்கும். பண வரவு, வருமானம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ராசியாதிபதி சூரியன் குரு பகவான் வீட்டில் இருப்பது மிகுந்த சிறப்பாகும்.
அதிர்ஷ்டம்
குரு பகவான் வீட்டில் சூரியன் இருப்பதால் இந்த மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தனுசு ராசியில் 5 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல வரவுகள் ஏற்படும். நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். அரசாங்க வகையில் இருக்கும் கெடுபிடிகள், வாதங்கள் விலகும். அரசாங்க வகையில் உங்களுக்கு அனுகூலம், ஆதாயம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான நற்செய்திகள் வரும்.
விரயம் ஏற்படும்
சிறு சிறு தடைகளை கொடுத்தாலும் நன்மைகளும் ஏற்படும். சேர்த்து வைத்த சேமிப்புகள் கரையக் கூடிய மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள் கூட சுப விரயமாக உங்களுக்கு அமையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். 7 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் இரண்டாம் திருமணம், மறுமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.
வழிபாடு
தேவையில்லாத தடுமாற்றங்கள், இடமாற்றம், எதிர்பாராத ஏமாற்றங்கள் போன்றவை அஷ்டமசனியில் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் அனைத்தில் இருந்தும் தற்காத்துக் கொள்ள குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மிக அவசியமாகும். குலதெய்வ விருச்சத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் கற்பூரம் காட்டி வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications