Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனீஸ்வரரின் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. 3 ராசியினருக்கு அடிச்சது யோகம்.. பணமழை கொட்ட போகுது

Subscribe to Oneindia Tamil

புஷ்ய யோகம்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனீஸ்வரரின் நட்சத்திரமான புஷ்ய நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால் உருவாகும் மங்கள புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்...

ஒவ்வொரு கிரகங்களுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுமே அதன் தாக்கத்தை அனுபவிக்கும். ஒரு சில ராசிகள் இந்த இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தையும் சுப பலன்களையும் அனுபவிப்பார்கள். ஒரு சில ராசிகள் கெடுபலன்களை அனுபவிப்பார்கள்.

astrology rasipalan lucky zodiac signs

50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் சனீஸ்வரரின் நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டங்கள் உண்டாகப் போகின்றன. ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த நிகழ்வானது நடைபெறவுள்ளது. காலை 6:32 மணிக்கு செவ்வாய் கிரகம் சனி கிரகத்தின் நட்சத்திரமான புஷ்ய நட்சத்திரத்தில் நுழையப் போகிறது. இந்த மாற்றம் மங்கள புஷ்ய யோகத்தை உருவாக்கவுள்ளது.

இந்த மங்கள புஷ்ய யோகத்தால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலனை அடையப் போகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் புஷ்ய யோகம் என்பது மங்களகரமான சுபயோகமாக கருதப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த யோகம் வரும். அந்த வகையில் இந்த ஆண்டில் இந்த யோகம் ஏப்ரல் மாதத்தில் வரப்போகிறது.

இந்த செவ்வாய் புஷ்ய யோகத்தால் இந்த யோக காலம் தொடங்கியதிலிருந்து 3 ராசிக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியைக் காணப் போகிறார்கள். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி: செவ்வாய் பகவான் சனீஸ்வரரின் நட்சத்திரத்தில் நுழைவதால் வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். பெரிய வியாபார ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல்கள் உருவாகும். இந்த காலத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கன்னி ராசி: செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு சுப யோகத்தை கொடுக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பனிபோல விலகும். பொருளாதாரத்தில் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் வரும். புதிய தொழில், கடை, வியாபாரம் தொடங்குவதால் நல்ல ஆதாயம் காண்பீர்கள். வெற்றி தரும் காலமாக உங்களுக்கு இருக்கும்.

மீன ராசி: சனீஸ்வரரின் நடசத்திரத்திற்குள் நுழையும் செவ்வாய் கிரகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய ஆர்டர்கள், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் பெருகும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். புதிய கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+