மாசி மாத ராசி பலன் 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு மாசியில் லாபம் கொட்டப்போகுது
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப்போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப்போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், பத்தாம் வீட்டில் சனி, சூரியன், புதன், லாப வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மாசி மாதம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. புது முயற்றிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சூரியனும் குருவும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்கும். மாத பிற்பகுதியில் சனி,செவ்வாய், சுக்கிரன் இணைந்து பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

பதவி யோகம்
பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் சுக்கிரனால் சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனக்கவலைகள் நீங்கும். சகோதர சகோதரிகளால் சந்தோஷம் அதிகரிக்கும். விருந்து விஷேசங்களில் பங்கேற்பீர்கள். எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மனக்குழப்பம் நீங்கும்.

பண வருமானம்
தொழில் மூலதனம் செய்வதற்குத் தேவையான பணம் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் திறமை பளிச்சிடும். நிறைய மதிப்பெண் வாங்குவீர்கள். மனக்கவலை நீங்கி நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். புதிய விசயங்கள் தொடர்பாக பேசி முடிவு செய்வீர்கள். திறமையாக பேசி காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சகோதரர் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் தேடி வரும். பண விவகாரங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பேசும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலைதூக்கினாலும் எளிதில் சரியாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications