மாசி மாத பலன் 2025: தொழில், திருமணம், பணம் பெருகும் ராசிகள் எவை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மாசி மாத ராசி பலன்: மாசி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. மாசி மாதத்தில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களின் ராஜா சூரிய பகவான். கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் அந்த ராசியில் பகை ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால், சில ராசிகளுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9.40 மணிக்குப் பெயர்ச்சியாக உள்ளார். அங்கு சஞ்சரித்து வரும் சனி பகவானுடன் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த ஒரு மாத காலத்தில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிப்பார்கள். எந்தெந்த ராசியினர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

masi month rasi palan astrology

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் பெயர்ச்சியாகிறார். இதனால் உங்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமுதாயத்தில் புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மாசி மாதத்தில் உங்களுடைய வேலை, தொழில் சார்ந்த புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு மாசி மாதத்தில் பல்வேறு விதமான முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

திருமண வாழ்க்கை அல்லது காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வேலை, வியாபாரம், தொழில், ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைக்கான பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

சிம்மம் - சிம்ம ராசிக்கு அதிபதியானவர் சூரிய பகவான். இவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் இந்த மாதத்தில் நற்பலன்கள், நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் உறவுகள் மேம்படும். மகிழ்ச்சி பெருகும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பங்குச் சந்தைகளின் லாபம் கிடைக்கும். உங்களுடைய முதலீடுகள் மூலமாக பண லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உண்டாகும். செய்யும் செயலில் பொறுமையும் நிதானமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உறவுகள் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாவதற்கான சூழல் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகளும், நன்மைகளும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னற்றம் ஏற்படும். நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உங்களின் ஆரோக்கியமும் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.

கும்பம் - சூரியன் சஞ்சரிக்க கூடிய மாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். குறிப்பாக வேலை, கல்வி தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

துறை சார்ந்த முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண்பீர்கள். உங்களுடைய திறமை மீது நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையால் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+