Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுசு ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தன்னம்பிக்கையால் முன்னேறும் காலம்.. தொட்டதெல்லாம் தங்கம்

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தனுசு ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

May month rasi palan Dhanusu

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் தனுசு ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். மே 15 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 11 ஆம் அதிபதியும், ராசிநாதனும் பரிவர்த்தனை செய்கின்றனர். சுக்கிரன் குரு வீட்டிலும், குரு சுக்கிரன் வீட்டிலும் பரிவர்த்தனை ஆகின்றனர். சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். குரு 7 ஆம் பார்வையாக உங்களைப் பார்த்து வலுப்பெறச் செய்யப் போகிறார். 9 ஆம் அதிபதி மேஷத்துக்கு உச்சமாகிறார்.

திரிகோணங்கள் உச்சமாக இருப்பதால் தலைமைத்துவம் அதிகரிக்கும். துணிச்சலோடு எழுந்து நிற்பீர்கள். இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உங்களுக்கு வரும். எல்லாமே தெரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். உள்ளுக்குள் இருந்து 1, 5, 9 இயங்கப் போகிறது. மே 15 ஆம் தேதிக்குப் பிறகு 3 ஆம் இடத்தில் அமர்ந்து குரு பகவான் உங்களைப் பார்க்கப் போகிறார்.

ஆத்ம ஞானம் அதிகரிக்கும். அறிவு மேலோங்கும். அல்லல் பட்ட விஷயங்களில் இருந்து விடுதலை அடையப் போகிறீர்கள். மே 15 க்குப் பிறகு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். ஒரு குறையுமே இருக்காது. முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. தந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் சூழல் உருவாகும்.

5 ஆம் அதிபதி சூரியன் உச்சமாக இருப்பதால் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அக்கா, தங்கைக்கு, சகோதரர்களுக்கு செலவு செய்வீர்கள். அவர்களை அழகுப்படுத்தி பார்ப்பீர்கள். நீண்டநாட்களுக்குப் பிறகு உறவினர்கள், சகோதர, சகோதரிகளின் வீட்டில் சாப்பிடுவீர்கள். அதன் மூலம் சந்தோஷம், நிம்மதி, ஆதாயம் உண்டாகும். காரிய வெற்றி உண்டாகும்.

தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்தவர்கள் அலுவலகத்திலும், அலுவலகத்தில் இருப்பவர்கள் வீட்டில் வேலை செய்யவும், ஓவர் டைம் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு. நிறைய சந்தோஷங்கள் குவியும். சொந்த பந்தங்களின் ஆதரவு உண்டாகும். லாபம் அதிகரிக்கும். வெள்ளி, தங்கம் சேருவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு பேக், ஆடை போன்றவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். சிறு சிறு செலவுகள் உண்டாகும்.

தன்னம்பிக்கை அபரிமிதமாக உயரும். எந்த விஷயத்தை செய்தால் எது சரியாக நடக்கும் என்று சிந்தித்து செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை எல்லாம் ஆரம்பிப்பீர்கள். தாயுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வேலையில் தாமதத்தை தவிர்ப்பது நல்லது. அதனால், பாதிப்புகளைச் சந்திக்க கூடும். நம்பிக்கையை காப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். அதனை காப்பாற்றுவதன் மூலமாக வெற்றியைச் சந்திப்பீர்கள்.

இந்த அருமையான காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய வாகனங்களை வாங்குவீர்கள். இடம் வாங்குவீர்கள், வீடு கட்டுவீர்கள். மாணவர்கள் கணினி, ஆன்லைன் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நிறைய தரவுகள் மூலமாக தகுதியை உயர்த்திக் கொள்ளும் காலகட்டம்.

40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலை தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. உறவுகள் வந்து சேரும். அதன் மூலம் ஆதாயம் உண்டாகும். மிகச்சிறந்த வியாபார வல்லுநர்களாக மாறும் சூழல் உண்டாகும். முதலீடு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ஹயக்ரீவர் வழிபாடு மிகச்சிறந்த முன்னேற்றத்தை தரும். அனுமன் கோயிலில் வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா படிப்பது அருமையான பலன்களைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+