சிம்ம ராசிக்கு உச்சம் தொடவைக்கும் ராஜயோகம்.. லாபம் கொட்டப் போகுது
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சிம்ம ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.
சிம்மம்
அஷ்டம சனி நடைபெற்று வருகிறது. ஜென்ம ராசிக்குள் கேது பகவான் வரப்போகிறார். ராகு பகவான் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் 11 ஆம் இடத்துக்கு வரப்போகிறார். இது நினைத்து சிம்ம ராசியினர் கவலைப்பட வேண்டாம். சனி பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ராஜயோகம்
எட்டு என்பது மறைவு ஸ்தானம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். குரு பகவான் லாபத்தில் அமரப் போகிறார். தொழிலில் இருந்த தடைகள், சிக்கல்கள், தொய்வு எல்லாமே சுக்கு நூறாகும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
உத்யோகத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, எதிர்பார்த்தபடி பணி மாற்றங்கள் நிகழும். புதிய பொறுப்புகள் கூடும். ராசி நாதன் சூரியன் உச்ச பலத்தில் இருக்கிறார். அதனால் தொட்டதொல்லாம் துலங்கும். உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
குல தெய்வம்
மனக்கவலைகள் நீங்கி சற்று நிம்மதி கிடைக்கும். உங்களின் திட்டங்கள் எல்லாம் படிப்படியாக நிறைவேறும். குல தெய்வத்தின் அருளால் நன்மை நடக்கும். கேது பகவானால் உங்களின் மனத்தில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதில் பதற்றம் நீங்கி அமைதி பிறக்கும். தெளிவான திட்டமிடல்களால் எல்லாவற்றிலும் வெற்றிகள் குவியும்.
புகழ்
ராகு ஏழாம் இடத்தில் வருவதால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பெயர், புகழ் அதிகரிக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
முன்னேற்றம்
அரசு, அரசியல், கட்டுமானம், விவசாயம், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். சேமிப்பு உயரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகள் இனி தொடங்கும்.
வாழ்க்கை துணை
ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கை, கால், கழுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் எச்சரிக்கை அவசியம். எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான சிந்தனைகளுடன் முன்னேறுங்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
கவனம்
கல்வியில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறவுகளுடன் மோதலை தவிர்ப்பது நல்லது. ஆண், பெண் இருவருமே எதிர்பாலினத்தினர் விவகாரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். காளி, வராகி, கனகவள்ளி தாயார் ஆகியோரை வழிபடுவதால் தடைகள் விலகி நன்மை பிறக்கும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications