Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன?
ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.
தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியினருக்கு செழிப்பான முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். உங்களுக்குப் பல்வேறு பாதிப்புகளையும், சிரமங்களையும் தந்து கொண்டிருக்கும் ஜென்மசனியை குரு பகவான் பார்க்கிறார். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் விடுதலை அடையும் காலகட்டமாக இருக்கும். போன மாதத்தில் இருந்தே உங்களுக்கு நல்லவை நடக்க ஆரம்பித்திருக்கும்.
செலவுகள் அதிகரிக்கும்
இந்த மாதத்தில் இருந்து ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் பின்னடைவு, அதிகஅளவிலான செலவுகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய தன்மைகள் உண்டாகும். ராசிநாதன் வலுவாக உச்சமாக இருப்பதால் ஜென்மசனியில் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
கவனம்
எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அகலகால் வைக்கக் கூடாது. மற்றவர்களை நம்பி தொழில் ஆரம்பித்தேன், பணம் கொடுத்தேன் என்று சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்த்துப் போகும் என்பதால் இள வயதில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் தொடர்பான அனுபவங்கள் ஏற்படும். 30, 20 வயதில் இருப்பவர்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.
பணவரவுகள்
காதல் விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. வேலையில் நிறைய நெருக்கடிகள் வரும் என்பதால் கவனம் தேவை. 40 வயதைக் கடந்தவர்களுக்கு பெரிய சோதனைகள் எதுவும் ஏற்படாது. இயல்பான பணவரவுகள் உண்டாகும்.












Click it and Unblock the Notifications