Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கானமீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு பார்வை இருப்பதால் தொழிலில் நல்ல ஏற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது பெரிய வெற்றிகள், சந்தோஷத்தைம், யோக பலத்தையும் பெற்றுத் தரும். விரயங்கள் அனைத்தும் சுபவிரயமாக மாறும். கடல் கடந்து இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தாய்நாட்டிற்கு திரும்பும் யோகம் உண்டாகும்.
முதலீடுகள்
வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தொடர்ந்து இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். உத்தியோகத்தில் அதிகளவிலான ஏற்றம், நன்மை ஏற்படும்.
மாற்றம், முன்னேற்றம்
சோம்பல் இல்லாமல் இருக்கக்கூடிய மீன ராசியினர் பெரும் வெற்றிகளையும், சந்தோஷத்தையும் பெறுவீர்கள். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. கோளார் பதிகத்தை தினந்தோறும் சொல்லி வருவது ராகு, கேது தோஷத்தைப் போக்கும். தொழில், படிப்பில் வரும் மாற்றங்களை செய்வது நல்லவிதமான ஏற்றத்தைக் கொடுக்கும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
குருவின் அருள்
சனி வக்கிரத்தில் இருப்பதால் நிறைய அழுத்தம் இருந்தாலும், குரு திரிகோணத்தில் இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எல்லா விதமான பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். சண்டை, சச்சரவு, வாக்குவாதம், சிக்கல்கள் ஏற்பட்டாலும் குரு உங்களைக் காப்பாற்றுவார்கள்.
வழிபாடு
பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. நிறைய சந்தோஷமும், ஏற்றங்களும் ஏற்பட பைரவர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கழிவுப் பாதை, அஜீரணம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனநிம்மதியைப் பெற அனுமன் வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications