Rasi Palan This Week: குருவின் அருளால் மீன ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. தொழிலில் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராகிக்கு பெயர்சி ஆவதே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரச்சித்த பெற்ற விசேஷம் கார்த்திகை தீபம். சபரிமலைக்கு மாலை போடுவது, செவ்வாய் வீட்டிற்க சூரியன், அதாவது பகை வீட்டிற்க சூரிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு பெற்றோர் பெரியோர்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவுகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இதுவரை இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக இனி அடுத்தடுத்து நடக்கும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது, வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
அடிவயிறு, கழிவு, பாதம் வரை சிறிது கவனமாக இருப்பது நல்லது. ஜென்மசனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கத்தை படிப்பது, கேட்பது உங்களுக்கு தடைகளையும், மன அழுத்தங்களையும் விலகச் செய்யும்.
தொழிலில் அனுகூலம்
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு யோகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். தொழிலில் அதீத ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், படிப்பு ஏற்றம் என எல்லா விதத்திலும் நல்ல ஏற்றங்கள் உண்டாகும். நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும்.
நிலம், வீடு வாங்கும் யோகம்
முதலீடுகள் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். குரு பார்வை வக்கிரகதியில் இருந்து பார்ப்பதால் மீன ராசியினர் வீட்டில் நன்மைகள் ஏற்படும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை, முதலீடுகள் போன்றவை அதிகரிக்கும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது போன்ற அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும்.
லாபம் கொட்டும்
தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கோயில் நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயயத்தில் அடுத்தடுத்து நல்ல நன்மைகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் பெரிய அளவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். மறுமண அமைப்பு கைகொடுக்கும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபாடு செய்வது, மகான்கள் தரிசனம் செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications