Rasi Palan This Week: லக்கி பாஸ்கரா மாறும் மீன ராசி.. இந்த வாரத்தில் சூப்பர் மாற்றம் காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான யோகங்களும் உண்டாகும். யாரிடமும் பகைமையை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பது நல்லது. எல்லா காரியங்களிலும் ஜெயம் ஏற்படும்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட அனுகூலங்கள் ஏற்றத்தை தரும். அடிவயிறு, முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கிட்னி ஸ்டோன் பிரச்சனைகள் அதிகமாக வரும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
தொழில் யோகம்
ஜென்ம சனியிலும் தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். அரசுத் துறை, அரசியல், அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். வண்டி வாகன மாற்றங்கள் உண்டாகும்.
பதவி உயர்வு
பதவி உயர்வு தொடர்பான அனுகூலங்கள் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். கடல் கடந்த பயணங்கள், தொலைதூர பயணங்கள், திட்டமிட்ட திட்டமிடாத பயணங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டும்படியான காலகட்டமாக இருக்கும். மனதில் இருக்கும் பாரங்கள் அனைத்தும் தீரும்.
இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் அனைத்தும் நீங்கும். பதவி உயர்வுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் அமையும். தெய்வீக வழிபாடுகளைச் செய்வது நல்லது. தெய்வ திருத்தலங்கள், மலை கோயில்கள் மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வது ஏற்றத்தை தரும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. 30 நாட்களில் வரும் குட்நியூஸ் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications