Rasi Palan This Week: மீன ராசி தலைக்கு மேல் கத்தி.. இந்த தப்பை மட்டும் செய்ய கூடாது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-that-pisces-meenam-signs-will-get-from-december-1-to-7

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைத் தவிர்த்து எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பூர்விக சொத்து, நிலம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மிகவும் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது புத்திசாலித்தனம்.

நிதானம்

நிதானத்துடன் செயல்பட்டால் உத்யோகம், தொழிலில் இரண்டிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் நிச்சயம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். சுப காரிய தடைகள் விலகி அடுத்தடுத்து நல்ல செய்திகள் உங்கள் வீடு தேடி வரும்.

ஆரோக்கியம் கவனம்

குழந்தைகள் விஷயத்தில் இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடன் சண்டை, கோபம் வேண்டாம். பொறுமையாக இருந்து அன்பால் வழி நடத்துங்கள். அபிராமி அந்தாதி பாடல்களை வாசியுங்கள். ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்.

பரிகாரம்

வார்த்தைகளில் எச்சரிக்கை வேண்டும். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதம், மோதலை தவிர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை பசு மாடுகளுக்கு காய்கறி தானம் செய்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கூடும். வீட்டு அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடுவதும், தினசரி தோப்புக் கரணம் போடுவதும் நற்பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+