Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு பங்குனி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Meenam Rasi Palan: மார்ச் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 3 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Meenam Weekly rasi palan lucky zodiac signs

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பங்குனி மாதத்தில் அபரிமிதமான நன்மைகள் உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளுடன் தர்க்கம், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களிடம் தேவையில்லாமல் பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

தொழிலில் யோகம்

தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். தினந்தோறும் காலையில், பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது ஏற்றத்தை ஏற்படுத்தும். ஜென்மசனி நடப்பதால் தினந்தோறும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. லாபம், அனுகூலம், சந்தோஷம் ஏற்படும். மன வருத்தம், அழுத்தம் நீங்கும். சுபவிரய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் காணப்படும்.

முன்னேற்றம்

நிறைய செலவுகள் ஏற்பட்டாலும் கடன் கிடைக்கும், இன்டீரியர் டெக்கரேஷன் செய்வீர்கள். கட்டடம் கட்டுவீர்கள், தொழிலில் முதலீடு செய்வீர்கள். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சியை மட்டும் மறக்கக் கூடாது. கணவனாக இருந்தால் மனைவியின் விஷயத்திலும், மனைவியாக இருந்தால் கணவரின் விஷயத்திலும் இணக்கமாகச் செல்வது நன்மையை ஏற்படுத்தித் தரும்.

சுபச்செலவுகள்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். நிறைய செலவுகள் இருப்பினும், அதனை சுபச் செலவுகளாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

வழிபாடு

நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வயிறு, முதுகு தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் கட்டாயமாக உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். நவக்கிரகத்தில் சூரியன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆதித்ய ஹிருதயத்தைக் கேட்பது மேன்மையைத் தரும். வண்டி, வாகனங்களில் வித்தைகள் செய்யாமல் இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+