Meenam: மீனம் ராசியை சுழற்றி அடிக்கும் கிரகங்கள்.. பணம், காதல் விஷயத்தில் ரொம்ப கவனம்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீனம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Meenam]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் மார்ச் மாத பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு குறிப்பாக உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். அடுத்த மாத்ததில் இருந்து உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். 30 வயதுக்குள் உடையவர்கள் கடுமையான குழப்பத்தில் இருப்பீர்கள். 20 வயதுக்குள் இருப்பவர்கள் படிப்பு சரியாக இல்லை, வேலை சரியாக இல்லை, காதல் போன்ற அமைப்புகளில் மன அழுத்தங்கள் கண்டிப்பாக இருக்கும்.
சுபகடன்
தன்னைச் சுற்றி ஏதோவொன்று நெகட்டிவாக நடக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற எந்தவொரு நிலைமைகளும் ஏற்படாது. உங்களுக்கு சில சுப கடன்கள் மட்டுமே ஏற்படும். சொத்து சேர்க்கை, சொந்த வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும்.
கவனம்
வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காதல் என்கிற பெயரில் உங்கள் மனம் சிறிது திசை திரும்பும் சூழல் உண்டு. வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காதல் என்ற பெயரில் திசைதிரும்பும் வாய்ப்புள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்கிற நிலை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இருந்தாலும் சில விஷயங்களில் இப்படித்தான் இருப்பேன், இப்படி தான் நடப்பேன் என்று கொள்கைப் பிடிப்போடு இருப்பீர்கள்.
அகலகால் வைக்காதீங்க
சில விஷயங்களில் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. பணம், வேலை சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் சிக்கல், பிரச்சனை, பாதிப்புகள் என்றிருப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விடாமல் இருப்பது நல்லது. கிடைக்கும் இன்னொரு வேலையில் அதை விட பிரச்சனை இருக்கும் என்பதால் கவனம் தேவை.
மன அழுத்தம்
அடுத்த மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தில் சனி போகிறார். படிப்படியாக பாதிப்புகள் ஏற்படும். வேலையில் அழுத்தம், மன அழுத்தம், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போவது, வேலை அதிகமாக செய்யக்கூடிய அமைப்பு, திறமைக்கேற்ப வேலை கிடைக்காமல் இருப்பது, நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது, காதலன், காதலி உறவில் மன அழுத்தங்கள் இருக்கக்கூடிய தன்மை உண்டாகும்.
பண விஷயத்தில் கவனம்
காதல் தோல்வி ஏற்படுவது, தகுதியற்ற நபர்களோடு தொடர்பு ஏற்படுவது, தகுதியற்ற விஷயங்களை தாங்கள் செய்யும் நிர்ப்பந்தத்தில் இருப்பது என்பது போன்ற அமைப்புகள் ஏற்படும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் தேவையில்லாத சிக்கலில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். பொறுப்பாகவும், நிதானமாகவும் இருப்பது நன்மை பயக்கும்.
சுப விஷயம்
தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். புதிய உத்தியைக் கையாண்டு அதன் மூலம் வருமானம் பெறும் யோகம் உண்டு. கடனை அடைக்கக்கூடிய அளவுக்கு வருமானம் வரும். ஐந்து மடங்கு லாபங்கள் கிடைக்கும். புதிய கிளையைத் திறப்பீர்கள். 50, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடும்பத்தில் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications