Meenam Rasi Palan: மீன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் இந்த வாரம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதால் தேவையில்லாமல் பிரச்சனை, வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
நினைத்த காரியங்கள் செய்ய முடியாமல் போகும். அடம்பிடிப்பது, சண்டை போடுவது இந்த வாரம் அதிகமாக இருக்கும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. சுவையான உணவு கிடைக்கும். மருந்து மாத்திரைகள் வேலை செய்யும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆசிரியர்கள், வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம்.
ஆரோக்கியம்
உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சூரிய வழிபாடு, அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரம்பு, முதுகு தண்டுவடம், கழுத்து, அலர்ஜி தொடர்பான பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பொறுமை, நிதானம் அவசியம்.
சிக்கல்
மேலதிகாரிகள், அரசியல், அரசுத் துறை, உத்தியோகம், வியாபாரம், தொழில் என எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை. எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வது நல்லது. குடும்பம், நண்பர், உறவுகள், தெரியாதவர்களிடம் கூட இணக்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சட்ட சிக்கல்கள், கஷ்டங்களில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
பணவரவு
பொருளாதாரம் நன்றாக இருக்கும். கையிருப்பு பணம் இருக்கும். பண வரவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். தலைக்கு பின்புறம் அடிபடுவது, கால், பாதத்தில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications