மீன ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. ஒரே ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 1 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கானமீன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம் வார ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொடர்பான விஷயங்கள், குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. காய்ச்சல் காரணமாக சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளிடம் வாக்குவாதம், கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
மாற்றங்கள் வரும்
இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான மாற்றங்களும் உங்களுக்கு வரும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். உங்களுடைய குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிட்டு ஆறுதல் கூறுவது, பஞ்சாயத்து செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
உங்களுடைய துணை உடற்பயிற்சி செய்வது நல்லது. இல்லையெனில் அவர்களுக்கு முதுகு, பாதத்தில் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வது நன்மை பயக்கும். வெளியிடம், பயணம், கடல் கடந்த பயணம், வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம், முன்னேற்றம், மகிழ்ச்சி அடைவதற்கான நேரமாக இருக்கும்.
வெற்றி மேல் வெற்றி
முதலீடுகளைச் செய்வீர்கள். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படும். பண வரவில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மனதில் இதுவரை இருந்து வந்த பாரங்கள், கஷ்டங்கள் படிப்படியாக நீங்கும்
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். சூரியனார் கோயிலுக்குச் சென்று அங்கு கோள் வினை தீர்க்கும் விநாயகருக்கு வழிபாடு, அபிஷேகம் செய்வது பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும். ஆண்டுக்கு ஒருமுறையாவது சூரியனார் கோயிலுக்குச் செல்வது நற்பலன்களைத் தரும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications