This Week Rasi Palan: மீனம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. நோட் பண்ணுங்க
வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்களை அதிகளவில் அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நீங்கும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையையும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையையம் அதீத கவனமாக பார்க்க வேண்டும். முதுகு, கழுத்து, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதீத எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாற்றம், முன்னேற்றம்
குருவின் பார்வை இருப்பதால் திடீர் இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார இடமாற்றம், படிப்பு இடமாற்றம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அலுவலகத்தில் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும்.
சிக்கல் தீரும்
உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பு ஏற்றம் போன்றவை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். ரத்த பந்த உறவுகளிடத்தில் வாக்குவாதத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. புதன்கிழமையில் தேவி வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
அனுகூலம்
நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல மருத்துவரும், மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் அமைப்பு உள்ளது. உத்தரவாதத்துடன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அனுகூலத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து இருந்து வந்த பாதிப்புகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏராளமான மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதும், பேச்சில் இனிமையையும் கடைப்பிடிப்பது நல்லது. புதன்கிழமைகளில் தேவிகளை வழிபாடு செய்வது, அம்பாள் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.
-
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications