ஆவணி மாத பலன் 2025: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு ஏற்றம்.. சூரிய பகவானின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்திற்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் இந்த ஆவணி மாதம் முழுவதும் இருக்கும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருப்பது கடன், நோய், வம்பு, வழக்கு, அசிங்கம் போன்றவற்றை தவிர்க்கும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக கடனில் சிக்கி பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். தொழில், வியாபாரம் நன்றாக இருந்தாலும் நீண்ட நாட்களாக கடனில் சிக்கித் தவிர்ப்பவர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் கடனைத் தீர்ப்பதற்கான யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
கடனைத் தீர்ப்பதற்கான சிந்தனைகள் உருவாகும். அதுதொடர்பான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் தீரும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவும் இருக்கும். 5 ஆம் இடத்துக்கு அதிபதியான சூரியன் 5 ஆம் இடத்திலேயே வலுவாக இருக்கிறார். இளைஞர்களுக்கு உயர்ந்த சிந்தனைகள் உண்டாகும்.
இலக்குகள் நோக்கி பயணம்
எதிர்கால அமைப்பில் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது போன்ற அனைத்து இலட்சியங்களும் செயல்படக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். வயதிற்கு ஏற்றாற்போல அனைத்து விதமான நல்ல பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். பாக்கியாதிபதி பாக்கியத்தை பார்க்கிறார். அதனால், கடந்த காலங்களில் பாக்கியங்கள் எதுவும் கிடைக்காதவர்களுக்கு நிறைவான நல்ல பாக்கியங்கள் கிடைக்கும் அற்புதமான மாற்றம் உண்டாகும்.
ஏழரை சனியால் பாதிப்பு இல்லை
பொதுவாக 3, 4, 5, 6 ஆம் இடங்களில் நல்ல நிலைமைகளில் கிரகங்கள் இருப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். உங்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஏழரை சனியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நிறைய பண வரவுகள் உண்டாகும். விரைய சனியாக இருப்பதால் நல்ல செலவுகளைச் செய்தாலும், அதற்கேற்ப வருமானங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
எதிர்ப்புகள் விலகும்
வருமானத்தைக் கொடுக்கும் அமைப்பில் 5 ஆம் அதிபதியான சூரியன் மாதம் முழுவதும் 5 ஆம் இடத்தில் இருப்பது அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். ராசிநாதன் 6 ஆம் இடத்தில் இருப்பது எதிர்ப்புகள் அனைத்தையும் விலகச் செய்யும். வேலை மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை மாற்றம் உண்டாகும். வேலை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நல்ல வேலை அமைப்புகள் ஏற்படும்.
சுப கடன்கள்
சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படுதற்கான வாய்ப்புள்ளது. பழைய கடன்களை அடைப்பதற்கு குறைந்த வட்டியில் புதிய கடன் வாங்குவது, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற நல்ல கடன்களை வாங்குவதற்கான யோகம் உள்ளது. பெரிய சோதனைகள், பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
பெண்களுக்கு யோகம்
பெண்களுக்கு நன்மைகள் அதீதமாகப் பெறும் யோகம் உண்டு. மாமியார், மாமனாரிடம் மன சங்கடம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டு வேலை, அலுவலக வேலை என இரட்டை சூழலில் இருக்கும் பெண்களுக்கு மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளும் சூழல் உண்டாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். தூரத்தில் இருக்கும் பிள்ளைகள் தொடர்பான சிந்தனைகள், மன வருத்தங்கள் எல்லாமே பரிபூரணமாக நீங்கும்.












Click it and Unblock the Notifications