Rasi Palan This Week: மேஷ ராசிக்கு கொட்டும் தன பாக்கியம்.. உங்க காட்டுல இனி பண மழை தான்
Mesham Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷ ராசி மற்றும் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் புதிய வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் உறுதியாகக் கூடிய யோகம் உண்டாகும். திடீர் பயணங்கள் ஏற்படும். ஆன்லைன் மூலமாக பண வரவுகள் நன்றாக இருக்கும். உங்களுடைய பணத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். மனம் மிகவும் லேசாகும் தன்மை ஏற்படும்.
முன்னேற்றம்
நிலம், வீடு, பயணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை பொறுமையாக கையாளுவது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லவை நடக்கக்கூடிய காலகட்டம். தெய்வ காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மன அழுத்தம் தீரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
அனுகூலம்
சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழிலில் பெரிய ஏற்றம் ஏற்படும். அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகளுக்கு வரும் நல்ல காலகட்டம். இளவயதை சேர்ந்த மேஷ ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் இருந்து வந்த எல்லா விதமான பிரச்சனைகளும் தீர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் அமைப்பு ஏற்படும்.
வண்டி வாகன யோகம்
தள்ளிப்போய் நடக்க வேண்டிய காரியங்கள் கூட இனி உங்களுக்கு எளிமையாக நடக்கும். நிறைய பிரச்சனைகள், சவால்களில் இருந்து வெளியில் வருவீர்கள். கணினி, பத்திரப் பதிவு, மீடியா துறையில் இருப்பவர்கள், வண்டி, வாகனங்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், கன்சல்டிங், ஆடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
காசு, பணத்திற்குப் பிரச்சனை இருக்காது. நினைத்து பார்க்காத நல்ல காரியங்கள் நடக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பகைவர்கள் கூட நட்பு பாராட்டும் நல்ல காலகட்டம் துர்க்கை வழிபாடு, லட்சுமி நாராயணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications