Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.. இந்த வாரத்தில் பெறும் நன்மைகள்
Mesham Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விதமான பதட்டங்களும் நீங்கும். நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டு. புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். முதலீடுகளை செய்வீர்கள்.
முன்னேற்றம்
தொழிலில் அடுத்தடுத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில், உத்தியோகம், குடும்பம் என அனைத்து விஷயங்களிலும் உங்கள் கடமைகளை திட்டமிட்டு செய்வீர்கள். இதுவரை எல்லோருக்காகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த அமைப்புகள் மாறும். உங்களுக்காக உழைக்கும் அமைப்பு ஏற்படும். எதிரிகள், துரோகிகளைப் பற்றிய கவலைகள் நீங்கும்.
வழிபாடு
அற்புதமான நல்ல பலன்கள் பெறும் காலகட்டம். உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். அலர்ஜி போன்ற தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள், விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். மேஷம் ராசியினருக்கு அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்!












Click it and Unblock the Notifications