Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்
Mesham Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அலைச்சல்கள் காணப்பட்டாலும் அதில் சந்தோஷம் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து முடிப்பீர்கள். கெளரவம் ஏற்படும். பதவி உயர்வு, விருதுகள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். ஏற்றத்திற்கான அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட அனுகூலம் காணப்படும். காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
தடை நீங்கும்
ஒவ்வாமையால் தேவையில்லாத பாதிப்புகள் காணப்படும். அந்த விஷயத்தில் மட்டும் அதிக கவனம் தேவை. பிள்ளைகள், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் அனைத்தும் நீங்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாய் வழி உறவில் மேன்மை உண்டாகும்.
உதவிகள் கிடைக்கும்
குடும்பத்தில் துணை விஷயத்தில் ஏற்றங்கள் ஏற்படும். பல பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். பதவிகள், பாராட்டுகள் தேடி வரும். நண்பர்களால் நிறைய உதவிகள் கிடைக்கும். உடம்பில் உள்ள விட்டமின் குறைபாடுகள், நார்ச்சத்து பிரச்சனைகளில் கவனம் தேவை. கால் முட்டியில் அடிபடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பெண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
வழிபாடு
நண்பர்களால் நிறைய இடையூறுகள் வரும் வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கக்கூடிய வாரமாக இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications