Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ
Mesham Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் துணை எதைக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வது நல்லது. உங்களுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களுக்காக கொஞ்சம் மாறிக்கொள்வது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது.
பணம் வந்து சேரும்
மனதில் ஒருவிதமான பாரம் இருந்து கொண்டே இருக்கும். அதனை தள்ளிவைப்பது நல்லது. எல்லா விஷயங்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். அதன் மூலம் மேன்மை அடைவீர்கள். இழுபறியாக இருந்து வந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கும். வியாபாரத்தில் அதிகளவிலான ஏற்றம் ஏற்படும். வராமல் இருந்து வந்த பணங்கள் எல்லாம் படிப்படியாக வரும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.
இணக்கம் தேவை
உங்களைச் சுற்றி நிறைய வேலைகள் இன்னும் முடியாமல் இருக்கும். அதனை எல்லாம் முடித்துக் கொள்வது நல்லது. மகான்கள் வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும்.
பணவிரயம்
நிறைய பண விரயங்கள் ஏற்படும். இரவுநேரப் பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேறு ஊறு, வேறு நாடுகளுக்குச் சென்று மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வெளியூரில் இருந்தவர்கள் இந்தியாவிற்கு வர முயற்சி செய்வீர்கள்.
தைரியம்
எல்லா விஷயங்களையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். ராகு, புதன் சேருவதால் நட்பு வட்டாரங்கள் மூலமாக நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய வைக்கும். எதிர்மறையான விஷயங்கள் எல்லாம் நீங்கும். சந்தோஷம் 60 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும் நல்ல காலகட்டம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications