Rasi Palan This Week: மேஷ ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. 7 நாட்களில் நடக்கப்போகும் மாற்றம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அமோகமான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் காலகட்டம். இதுவரை செய்யாமல் இருந்து அனைத்து தெய்வ வழிபாடுகளையும் செய்வீர்கள். அடிவயிறு, அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம்
இதயத்தில் பிரச்சனை உள்ளதா என்பது போன்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பாதிப்புகள் நிவர்த்தி
பழைய கடன்கள் அனைத்தையும் அடைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், சங்கடங்கள் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
தடைகள் விலகும்
இதுவரை செய்ய முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வந்த விஷயங்கள் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு குடும்பத்திலும், சமுதாயத்திலும் அதிகரிக்கும். துணையின் நீண்டநாள் சங்கடங்கள் தீரும்.
புதிய வாகன யோகம்
உங்களது பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் குறைகள் அனைத்தும் தீரும். மேஷ ராசியினரின் பிள்ளைகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அன்பைப் புரிந்து கொள்வார்கள். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. என்ன விஷயமாக இருந்தாலும் அதனை பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற நம்பிக்கை கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்வதில் இருந்து வந்த சிக்கல் தீரும். தொழில் உத்தியோகம், வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பண வரவு அதிகரி்ககும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த அமோகமான வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications