Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு எதிரிகளை வெற்றி பெறும் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தெய்வ யாத்திரை, கோயில் யாத்திரை செல்லும் யோகம் உண்டு. பண வரவு அதிகரிக்கும். நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அதனை நல்ல முறையில் முதலீடு செய்வீர்கள்.
தொழிலில் முன்னேற்றம்
இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து முடிப்பீர்கள். எல்லா விதத்திலும் வெற்றி பெறும் நல்ல காலகட்டம். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அனுகூலம் காணப்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். சம்பள உயர்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தோல் பட்டை வலி, கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பொறுமையாக இந்த வாரத்தைக் கொண்டு செல்வது நல்லது. பேசும் வார்த்தையில் மிகுந்த கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும்.
பண விஷயத்தில் கவனம்
செவ்வாய் 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசி, லக்கினத்தை பார்க்கும்போது வேகம், சுறுசுறுப்பு, உடம்பு கட்டுக்கோப்பாக மாறுவது போன்ற நல்ல மாற்றங்கள் காணப்படும். வெளியில் பணம் கொடுத்தால் திரும்பி வராது என்பதால் பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எலும்புகள் சார்ந்த, பின் இடுப்பு முதுகு வலி வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications