Rasi Palan This Week: மேஷ ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. இந்த வாரத்தில் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Mesham Lucky zodiac signs

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெயர், புகழ் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொலைதூரப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நல்ல வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள்.

சம்பள உயர்வு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் துணையுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். காதல் அமைப்பில் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் பெரியோருடன் ஏற்றங்கள் காணப்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

லாபம், சந்தோஷம்

இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி இனி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். லாபமும், சந்தோஷமும் நல்ல அனுகூலத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகம் ரீதியாக எடுக்கக் கூடிய முடிவுகள் அனைத்தும் சந்தோஷத்தை தரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

நிலம், வீடு வாங்கும் யோகம்

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, இடம் வாங்குவது, வண்டி வாங்குவது போன்றவற்றில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். எதிர்பார்க்காத நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்கள் வருகை தருவார்கள். மனதில் நம்பிக்கை ஏற்படும்.

சுகங்கள் தேடி வரும்

நீண்டநாட்களாக தனிமைப்பட்டு இருப்பதுபோல ஒரு மன உளைச்சல் இருக்கும். ஆனால், எல்லா சந்தோஷங்களும், எல்லா சுகங்களும் உங்களைத் தேடி வரும் நல்ல காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு யார் யார் முக்கியமோ அவர்களுடன் சந்தோஷமாக தொடர்ச்சியாக பயணிப்பது நன்மை பயக்கும். வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம் என்று மட்டுமே கடந்த ஓராண்டாக இருந்திருப்பீர்கள்.

கடன்கள் தீரும்

அடிமையாக இருக்கக்கூடிய அந்த வாழ்க்கையை மாறி பிடித்ததெல்லாம் செய்யுங்கள். பணம் என்பது முக்கியம்தான். பணத்துக்காகவே வாழக்கூடிய அமைப்பில் இருந்து மாறுவது நன்மையை ஏற்படுத்தும். இந்த புரட்டாசி மாதத்தில் நிறைய நல்ல விஷயங்கள் ஏற்படும். தொழில் மாற்றங்கள் ஏற்படும். பழைய கடன்களை முடிக்கும் யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+