மிதுன ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. காதல், அரசு வேலையில் வரும் குட்நியூஸ்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் மிதுன ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல திருப்பங்கள், புதிய அறிமுகங்கள் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆரம்பகாலத்தில் இரண்டாம் இடத்தில் புதன் பகவான் இருக்கிறார். அதன் பிறகு 3 ஆம் இடத்தில் தொடர்பு கொண்டு சூரியனோடு சேர்ந்து வலுவான நிலையில் இருப்பார். புதன் சூரியனோடு இணைந்தே வருவார். தைரியமும், தன்னம்பிக்கையும் அதீத அளவில் உண்டாகும்.
பாதிப்புகள் இல்லை
3 ஆம் இடத்தில் மூன்றாம் அதிபதியாக சூரியன் இந்த மாதம் முழுவதும் ஆட்சி என்கிற நிலையில் இருக்கப் போகிறார். சூரியன் கேதுவோடு அவர் சேர்ந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. சூரியன் ராகுவோடு சேர்ந்தால் மட்டும் அதீத பலவீனமடைவார். 4 ஆம் இடத்தில் மாதம் முழுவதும் செவ்வாய் பகவான் இருப்பதால் வீடு, வாசல் தொடர்பான விஷயங்களில் சில செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வீடு விஷயத்தில் பிரச்சனை
வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறிய சிறிய பிரச்சனைகள், அலைச்சல்கள் கண்டிப்பாக வரும். வயதான அம்மாவை கொண்டவர்களுக்கு அவரிடம் இருந்து வரும் தகவல்கள் நன்றாக இருக்காது. தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அம்மாவை வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அம்மாவை பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.
அனுகூலம், முன்னேற்றம்
உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். சொந்த வாழ்க்கை, கணவன், மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். ஆவணி மாதம் 15 ஆம் தேதிக்குள் காதல் உறவுகள் அற்புதமாக இருக்கும். திருமணமாகாத நிலையில் இருக்கும் இளைய பருவத்தினரான மிதுன ராசியினருக்கு புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.
காதலில் யோகம்
7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வாழ்க்கைத் துணையை உறுதி செய்யும் நிலை உண்டாகும். காதலன், காதலி இணைந்து வெளியூர் பயணங்கள் செல்லும் யோகம் உண்டாகும். காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசைகள் ஏற்படும். அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்கள், அரசாங்கத் தேர்வுகள் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து ஒரு வருடத்துக்கு கிடைக்கும் யோகம் உள்ளது.
அரசு வேலை
அரசாங்க வேலை, அரசாங்கத்தில் பட்டா, உதவித் தொகைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு அதுபோன்ற வேலைகள் அனைத்தும் முடியும். அவைகள் நடக்கும் யோக மாதமாக இருக்கும். அரசு தொடர்பான அனுமதிகள், சுப விஷயங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆவணி மாதம் அதிர்ஷ்டங்களையும், மாற்றம், முன்னேற்றங்களையும் அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications