Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் மிதுன ராசி.. அடுத்தடுத்து நல்ல விஷயம் நடக்கப் போகுது
Mithunam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மிதுனத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். நிறைய நேர்மறையான விஷயங்கள் நடக்கும். அனைத்து விதமான தடைகளும் தவிடு பொடியாகக்கூடிய காலகட்டம். தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த அனைத்து விதமான தடைகளும் பரிபூரணமாக நீங்கும். பண வரவு அற்புதமாக இருக்கும்.
யோகம்
உத்தியோகத்தில் பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழிலில் அற்புதம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். குடும்பத்தாருடன் யாத்திரை செல்லும் யோகம் உண்டாகும். நிறைய பயணங்கள் செய்வீர்கள். தெய்வ சங்கல்பம் செய்யும் யோகம் உண்டாகும். நிறைய சந்தோஷங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
பதவி உயர்வு
யோகமான வாரமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கக்கூடிய பாக்கியம் உண்டு. 23, 24 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் சந்தோஷம் ஏற்படும். மனம் விட்டுப் பேசக்கூடிய காலகட்டமாக இருக்கும். புரிதல் அற்புதமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
இடமாற்றம்
மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கும். இடமாற்றம் உண்டாகும். கேல்சியம் குறைபாடுக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். வேலையில் சிலருக்கு டிரான்ஸ்பர் ஏற்படும். ஆர்கிடெக்சர், டிசைனர், டெஸ்டிங், டாக்குமென்டேஷன் படிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். சந்தோஷமும், சுபகாரியங்களும் நிறைய நடக்கக்கூடிய காலகட்டம்.
பணவரவு
பண வரவு நன்றாக இருக்கும். பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். தொழில் மாற்றங்கள் ஏற்படும் எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் தானம் செய்வது, ஸ்கெட்ச், கலர் பென்சில் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications