மே மாத பலன் 2026: பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்.. மிதுன ராசிக்கு பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

மே மாத பலன்கள் 2026: மிதுனம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-gemini-rasi-people-during-this-may

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், மிதுனம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசியினருக்கு மிகப்பெரிய வெற்றிகளும், மேன்மையும் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்கள் அனைத்தும் அற்புதமாக நடக்கும். அழகு, ஐஸ்வர்யம், ஆடம்பரம் என அபாரமான யோகம் உண்டாகக்கூடிய மாதமாக இருக்கும். விரயத்தில் சூரியன் இருப்பதால் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

அடிவயிறு, கழிவுப் பாதை, கண், பல் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் வந்து சரியாகும். அப்பா, மூத்த மகனின் ஆரோக்கியத்துக்கு செலவு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்கிறேன் என்று சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வைகாசி மாதத்தில் கல்யாணம், காது குத்து, திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது.

பணம் கொட்டும்

ஏராளமான வெற்றியைக் காணக்கூடிய மாதமாக இருக்கும். காசு, பணங்கள் வரக்கூடிய காலகட்டம். புதிய நட்பு உருவாகும். சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். ஜாலியாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன மகிழ்ச்சி, சந்தோஷம், பணத்துக்கு எந்தவொரு பிரச்சனைகளும் இருக்காது. ஆட்சி அமைக்கக்கூடிய யோகம் உண்டு. மிதுன லக்கினமாக இருந்தால் அமைச்சர் போன்ற பதவி கிடைக்கும்.

இந்த மாதம் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். முன்பு செய்த முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆனால் அவசர முடிவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. பணவரவு நிலை மேம்படும். எதிர்பாராத வருமானம் அல்லது bonus கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் செலவுகளும் அதிகரிக்கலாம். திட்டமிட்டு செலவழித்தால் சேமிப்பு செய்ய முடியும்.

வழிபாடு

உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். ஒரு புதிய திட்டத்தின் மூலம் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். பணம் சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழல்கள் ஏற்படும். புதிய முதலீடும் நீண்டகால அடிப்படையில் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய அமைப்பு உள்ளது. சந்தோஷம், பொருளாதாரம் ரீதியா 100 சதவீத நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம். விஜயலட்சுமி தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+