ஜாவா சுந்தரேஷனாக மாறும் மிதுன ராசி.. அடுத்தடுத்து வரப்போகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-august-17-to-23

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு அற்புதமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.

யோக பலன்கள்

பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைக்கு மருத்துவமனை சென்று குணமடைந்து வீடு திரும்புவீர்கள். மன அழுத்தம் நீங்கும் யோகம் உண்டு. புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். அரசு விருதுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். வங்கிகளில் இருந்து கடன் கிடைப்பார்கள். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம்.

பண வரவு கொட்டும்

எல்லா வேலைகளையும் வேகமாகவும், விவேகமாகவும் செய்து முடிப்பீர்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும். காசு, பணம் வரக்கூடிய அற்புதமான காலகட்டம். நிறைய வெற்றிகள் ஏற்படும் அற்புதமான காலகட்டம். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். 3 ஆம் இடம் பாதிக்கப்பட்டிருப்பதால் கழுத்து, தொண்டை பகுதிகளில் மிகுந்த கவனம் தேவை.

சொந்த வீடு

கழுத்து, தொண்டை பகுதியில் மிகுந்த கவனம் தேவை. கண், எலும்புகள் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நிறைய சுப செய்திகள் வரக்கூடிய காலகட்டம். சொந்த வீடு, இடம் நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது ஏற்றத்தைத் தரும். முருகர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+