அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. தொட்டதெல்லாம் வெற்றி.. மிதுன ராசிக்கான மே மாத பலன்கள்!

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

Mithunam may month rasi palan lucky zodiac signs

மிதுனம்

மிதுன ராசியினருக்கு அட்டகாசமான மாற்றங்கள் மிகுந்த மாதமாக இந்த சித்திரை மாதம் இருக்கும். உங்கள் ராசிநாதனாகிய புதன் இந்த மாதம் 11 ஆம் இடத்திற்கு வருகிறார். ஏப்ரல் மாதத்தில் எடுத்த காரியங்களில் தடை, எதிர்ப்பு, வருமானக் குறைவு போன்றவை இருந்திருக்கும். மே மாதம் 1 ஆம் தேதியில் இருந்து இந்த நிலைமைகள் மாறும். மே 11 ஆம் தேதி செவ்வாய் 11 ஆம் இடத்திற்கு ஆட்சி பலத்தோடு வருவதால் எதிர்ப்புகள், எதிரியை வெல்லக்கூடிய அமைப்பு ஏற்படும்.

மாற்றம்

தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். முதல் 10 நாட்கள் ஒருமாதிரி இருந்தாலும் பிற்பகுதி அதிஅற்புதமாக இருக்கும். ஜூன் மாதம் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி வருவதால் குரு பகவான் 2 ஆம் இடத்தில் வந்து உச்சத்தை அடையவுள்ளார். இதுவரை பணம் சம்பாதிக்க முடியவில்லை, தோல்வியே சந்தித்து வருகிறேன் என்று வருத்தப்பட்டவர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

ஆரோக்கியம்

20 வயதுகளில் இருக்கக் கூடியவர்களுக்கு கல்வி, வேலை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். 30 வயதினருக்கு சொந்த வாழ்க்கை அமைப்பு மேன்மை அடையும். நடுத்தர வயதினருக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம் நன்றாக இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். நிரந்தரமான நல்ல அமைப்புகள் உங்களைத் தேடி வரும்.

முன்னேற்றம்

மே 11 ஆம் தேதிக்குப் பிறகு எதிர்ப்புகள் விலகும். இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் இருந்து வந்த வருத்தங்கள், விரயங்களுக்குத் தீர்வு ஏற்படும். சகோதர, சகோதரிகளுக்கு திருமணம், நிச்சயதார்த்தம், பொருளாதார முன்னேற்றம் என மகிழ்ச்சிக்கான நேரமாக இருக்கும். இந்த மே மாதம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்களும் புதிய வாய்ப்புகளும் நிறைந்த காலமாக இருக்கும்.

முதலீடுகள்

சிந்தித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணியில் புதிய பொறுப்புகள் வரலாம். சிலருக்கு பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், ஆனால் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வருமானம் மெதுவாக உயரும். தேவையற்ற செலவுகளை தவிர்த்தால் சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+