Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இனி எல்லாமே உச்சம் தான்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்
Mithunam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் அங்கீகாரம், சலுகை, பொறுப்புகள் கிடைக்கும். நிதி சார்ந்த துறைகள், டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி தொடர்பான வேலைகள் கிடைக்கும். காசு பணத்திற்குப் பிரச்சனை இருக்காது. நல்ல அலுவலகத்தில் வேலை கிடைக்கும். பொருள் வளர்ச்சி ஏப்படும். பெரிய விஷயங்கள் எல்லாம் எளிமையாக நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம்.
முன்னேற்றம்
வேலை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும். ராகவேந்திரர் வழிபாடு பெரிய பலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.
சிக்கல் தீரும்
உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய அற்புதமான காலகட்டம். ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், அனிமிக் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் பெரியவர்களுடன், அண்ணன் தம்பிகளுடன் வாக்குவாதத்தில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எல்லா விஷயங்களையும் பொறுமையாகக் கையாளுவது நல்லது.
யோக பலன்கள்
வீண் வாதம், தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சொத்துகள் விஷயங்களில் சிறிது நஷ்டமானாலும் பொறுமையாக கையாண்டு விட்டுக் கொடுத்து பாகப் பிரிவினை செய்து கொள்வது நல்லது. வழக்கு போன்றவற்றுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப காரியத்தில் எந்தவித குறைவும் இருக்காது.
வழிபாடு
பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய காலமாக இருக்கும். இருப்பினும், அவர்கள் நல்லதுக்காகவே செய்வதால் அதனை ஏற்றுக் கொண்டு செல்வது நல்லது. பிரச்சனைகள் பாதியாகக் குறையும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் 95 சதவீதமும் நன்றாக இருக்கும். அம்புஜவள்ளி தாயார் வழிபாடு அனுகூலத்தைத் தரும்.
-
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications