Mithunam: மிதுன ராசிக்கு வைகாசி மாதத்தில் அதிரடி பலன்கள்.. பணவரவு உயரும்!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மிதுன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு வைகாசி மாதம் பல்வேறு முன்னேற்றங்களையும், புதிய வாய்ப்புகளையும் தரக்கூடிய காலமாக அமையும். மாத தொடக்கத்தில் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். வீடு மாற்றம் அல்லது இடமாற்றம் போன்ற நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் கவலைப்படத் தேவையில்லை.
தடைகள்
தாமதமான காரியங்கள்கூட இறுதியில் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முயற்சித்த காரியங்கள் சாதகமாக முடியும். புனித யாத்திரைகள் மற்றும் ஆன்மிக பயணங்கள் அதிகரிக்கலாம். 3 ஆம் இடத்தில் கேது இருப்பதால் சில தடைகள் வந்தாலும், அதை தைரியமாக சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
ஆடை, ஆபரண சேர்க்கை
வைகாசி 1 ஆம் தேதி சுக்ரன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால், பிள்ளைகளின் கல்வி, வெளிநாட்டு கல்வி முயற்சி, திருமணம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைக்காக எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சமூக நலப்பணிகளில் ஈடுபட விருப்பம் அதிகரிக்கும்.
பணவரவு
வைகாசி 12ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு வருவதால் உடல்நலம் மேம்படும். மன உற்சாகம் அதிகரித்து, பணிகளில் தீவிர ஈடுபாடு காண்பீர்கள். பணப்புழக்கம் உயரும். கடன் சுமை குறையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தொந்தரவு கொடுத்த அதிகாரிகள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
வழிபாடு
சில மாற்றங்களும் புதிய வாய்ப்புகளும் உருவாகும். போட்டிகளை வென்று முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுபச்செலவுகள் கூடும். வீடு, நிலம் வாங்கும் யோகமும் அமையும். முருகன் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications