Rasi Palan This Week: மிதுன ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. ராஜா பகவத் மாதிரி வாழப் போறீங்க
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி முதல் ஆவணி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள், பெற்றோர், துணை விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
மாற்றம், முன்னேற்றம்
புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து மாற்றங்களும் ஏற்படும் காலகட்டம். சுபச் செய்திகள் வந்து சேரும். நினைத்ததெல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வளப்ப்பு மீன், பறவை போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்லவை அனைத்தும் நடக்கும் நேரம் இது. பயன்படுத்திக் கொள்வது நல்லது. நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற யோகம் உண்டு. வேலை போனவர்களுக்கும் கூட முயற்சி செய்தால் நல்ல மாற்றங்கள் புதிய வேலை கிடைக்கும்.
நம்பிக்கை
ஊர் மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அற்புதமான காலகட்டம். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடைபெறும் சாத்தியக்கூறு உண்டு. பெரிய அளவு நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
கவனம்
எல்லா விதத்திலும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளது. நினைத்து பார்க்காத உயர்வுகள் கிடைக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தலைசுற்றல், மயக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications