Rasi Palan This Week: மிதுனத்துக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. வாய்ப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க
வார ராசி பலன்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோகத்தில் மாற்றங்கள் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களுடன் வாக்குவாத்தை வைத்துக் கொள்ளவே கூடாது. குறிப்பாக ரத்த பந்த உறவுகளுடன் சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆரோக்கியத்தில் கவனம்
வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயமும், சந்தோஷமும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பரம்பரையாக இருக்கும் நோய் பிரச்சனைகளில் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியம் குறைவோடு இருப்பதை தவிர்ப்பது நல்லது.
சொத்து பிரச்சனை தீரும்
பூர்வீகத்தில் இருக்கும் சொத்து பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் மற்றும் அம்பாள் வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் இருக்கும் தோஷத்தை நீங்கச் செய்யும். சத்ருக்களை வெற்றிக் கொள்வதற்கான அமைப்பு ஏற்படும்.
கடன்கள் தீரும்
பழைய கடன்கள் தீரும் நல்ல காலகட்டமாக இருக்கும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். யோக பலன்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கக் கூடிய அமைப்பு உள்ளது. இடமாற்றம் வந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும் நல்ல அற்புதமான நேரம்.
அனுகூலம்
உத்தியோகத்தில் அனுகூலங்கள் ஏற்படும். புதிய நம்பிக்கை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும் அமைப்பு உள்ளது. வாக்குவாதத்தை தவிர்த்துக் கொண்டு உறவினர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. நல்ல முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications