லோக்சபா தேர்தல் 2024 - தைப்பூசம் நாளில் வேலையை தொடங்கிய பாஜக.. மோடி ஜாதக யோகங்கள் சொல்வதென்ன?
சென்னை: தைப்பூசம் நாளான இன்றைய தினம் மத்தியில் ஆளும் பாஜக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளுடன் பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளது. இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நாற்காலியில் மோடி அமர்வதற்கான யோகம் உள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மோடி ஜாதகம்: பாரத பிரதமர் மோடி ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளன. சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன.

யோக ஜாதகம்: ஜோதிடத்தில் உள்ள யோகங்கள் ஒருவருக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றன. ராஜயோக ஜாதகம் அமைவது அரசாளும் தகுதியை தேடித்தருகிறது. சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேசரி யோகமாகும். இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும்.
புகழ் தரும் மோடி ஜாதகம்: மோடி ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்துள்ளது. சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும். இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும். மோடிக்கு இந்த யோகமும் அமைந்துள்ளது.
மோடியின் ஜாதக அம்சம்: நரேந்திர மோடி 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம்தேதி பகல் 11 மணிக்கு பிறந்தார். அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம் ராசி விருச்சிகம் வளர்பிறை சஷ்டியில் அனுஷம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்த நேரத்தில் புதன் திசை நடந்தது. 1985ஆம் ஆண்டுதான் அவரது ஜாதக அமைப்பு அவருக்கு சாதகமான அம்சங்களுடன் உருவாகத் தொடங்கின. சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிர திசை இருந்தது. 1985ஆம் ஆண்டு தொடங்கி 2005ஆம் ஆண்டு வரை அவருக்கு ராஜ யோகம்தான். கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரால் குஜராத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற முடிந்தது.
சூரிய திசை: கடந்த 2005ஆம் ஆண்டு மோடியின் ஜாதகத்தில் சூரியதிசை தொடங்கியது. இதனால் 2011ஆம் ஆண்டு வரை அவர் பலவிதமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இருந்ததால் மோடியால் தொடர் வெற்றிகளை பெற முடிந்தது. புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடிந்தது.
சந்திர திசை: 2011ஆம் ஆண்டில் அவருக்கு சூரிய திசை முடிந்து சந்திர திசை தொடங்கியுள்ளது. சந்திர திசை 10 ஆண்டுகள் இருக்கும். 2021 ஆம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெற்றது. இந்த அமைப்புதான் நரேந்திர மோடியை பிரதமர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது.
செவ்வாய் திசை: பிரதமர் மோடிக்கு தற்போது செவ்வாய் திசை நடைபெறுகிறது. அவரது ஜாதகத்தில் ருச்சிக யோகம் உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் ருச்சிக யோகம் இருந்தால் அரசாலும் யோகம் கிடைக்கும். ருச்சிக யோகம் பெற்றவர்கள் தயாள குணம் மிக்கவர், உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழோடு விளங்குபவர். ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது சந்திர மங்கள யோகம். சந்திரன் வளர்பிறை சந்திரனோடு சேர்ந்து இருந்தால் செவ்வாய் தசை சந்தோஷத்தை கொடுக்கும்.
மங்கள யோகங்கள்: பிரதமர் மோடி ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று பல யோகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடவே புதாதித்ய யோகம், நீசபங்க ராஜயோகம், ருச்சிக யோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன.
சண்டாள யோகம்: நடப்பு தசா நாதன் செவ்வாய் அவரது ராசி அதிபதியாகவும் இருப்பதால் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தேடித்தந்து மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரவைக்கும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். மோடியின் ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இது 'சண்டாள யோகம்' அமைப்பாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.
மோடியின் நிர்வாகத்திறமை: பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ஆம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். 10ஆம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் திறமையும், அந்த ஜாதககாரருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம் அபரிதமாக உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.
தைப்பூசம் நாளில் வீடியோ: இன்றைய தினம் தைப்பூசம், தை மாத பவுர்ணமி நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றிகள் தேடி வரும். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்றைய தினம் அரசியல் கட்சியினர் பலரும் லோக்சபா தேர்தல் வேலையை தொடங்கியுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜகவும் மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளுடன்
பிரதமர் மோடியை முன்னிறுத்தி பணியை தொடங்கி விட்டது.
மோடியின் ராஜ்ஜியம்: மொத்தத்தில் மோடி ஜாதகத்தில் 10ஆம் இடத்து சனி சுப பார்வை பார்ப்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரது ராஜ்ஜியம்தான் என்று சொல்லலாம். இந்த ஆண்டு வர உள்ள குரு பெயர்ச்சியும் மோடிக்கு நன்மை தருவதாக உள்ளது. குரு பகவானின் பார்வை மே மாதத்திற்குப் பிறகு விருச்சிக ராசியின் மீது விழுவதால் மோடிக்கு அமோக வெற்றியைத் தேடி வரும். அதே போல சனி பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்து சச யோகத்தை கொடுக்கிறார். விருச்சிக ராசியை பார்க்கிறார். ராகு 5ஆம் வீட்டிலும் கேது 11ஆம் வீடான லாப வீட்டில் பயணம் செய்வது வெற்றியை தேடித்தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
2028வரை அசைக்க முடியாது: மோடியின் ஜாதகப்படி செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ஆம் ஆண்டு வரை நடைபெறும். இந்த 7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார். அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். இன்னும் பல ஆண்டுகளுக்கு மோடி தொடர்ந்து உச்சத்தில்தான் இருப்பார் என்றும் அவரது ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள் உள்ளது என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications