நீசபங்க ராஜயோகம்: துலாம் முதல் மீனம் வரை ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. பண மழை கொட்டும்
Lucky zodiac signs: மீன ராசிக்குள் செல்லும் புதன் பகவானால் நீசபங்க ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் துலாம் முதல் மீனம் வரை அதிர்ஷ்ட பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்கள், நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவருடைய ராசிபலன் கணிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் இடமாற்றங்கள் நடைபெறவுள்ளன. புதன் பகவானும் தற்போதுள்ள இடத்தில் இருந்து பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் நுழைகிறார். பின்னர், அங்கிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்குச் செல்லவுள்ளார். புதன் நீச்சமடையும் ராசியாக மீன ராசி உள்ளது.

மீன ராசிக்குள் செல்லும் புதன் பகவானால் நீசபங்க ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தால் அனைத்து ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். இந்த யோகம் 365 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த வகையில், நீசபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் அள்ளும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி - துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. துணிச்சலாக செயல்படுவீர்கள். வியாபாரம், தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.
விருச்சிக ராசி - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம், தொழிலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனிமையான பழைய வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். வியாபாரம், தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு முருகப் பெருமானின் அருள் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம், முதலீடு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களுக்கு எதாவதொரு குழப்பம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். பழைய விஷயங்களைக் கைவிட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்ல பலன்களைத் தரும். மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும். பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை உறவால் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழில், வியாபாரத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
மகர ராசி - மகர ராசிக்காரர்களுக்கு மனதில் தைரியம் தோன்றும். தந்தை வழி உறவு மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய வாழ்க்கைத் துணை உறவினர்களால் நிதி சார்ந்த ஆதாயம் உண்டாகும்.
கும்ப ராசி - கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்கும். வியாபாரம், தொழில் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். சிவனை வழிபடுவது, சிவன் மந்திரத்தை ஜெபிப்பது நல்ல பல பலன்களை அள்ளித் தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீன ராசி - மீனம் ராசிக்காரர்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு பெருகும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதம், மனஸ்தாபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். அனைத்து பிரச்சனைகளையும், சவால்களையும் சாதுரியமாக சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாடு நல்ல பலன்களை அள்ளித் தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.












Click it and Unblock the Notifications