2023 புத்தாண்டு ராசிபலன்.. நவகிரகங்களால் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுமாம்
சென்னை: புத்தாண்டு நிறைய பேரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். சிலரது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயங்களை தரப்போகிறது. 2023ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது என நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க சுக்கிரன் மகர ராசியில் சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் ஜனவரி மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் மே மாதம் முதல் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளையும் பொருளாதார வளர்ச்சியையும் தரப்போகிறது.
ராகு கேது பெயர்ச்சியும் அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கும் பயணம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் சில ராசிக்காரர்களுக்கு சோதனையையும் தரப்போகிறது. சில ராசிக்காரர்கள் சாதிக்கப்போகிறீர்கள். யாருடைய வாழ்க்கையில் நவ கிரகங்களும் அதிசயிக்கத்தக்க மாற்றத்தையும் வெற்றியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டு நிறைய சுப காரியங்கள் நடைபெறும். தடைபட்ட திருமணம் நடைபெறும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பண வரவு அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ராசியில் உள்ள ராகுவினால் உடல் ஆரோக்கியத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து போகும். தேவையில்லாத பயம் வேண்டாம் எளிதில் குணமடையும். லாப சனியால் செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சமூகத்தில் வேலை செய்யும் இடத்தில் உங்களின் பெயர் புகழ் கவுரவம் அதிகரிக்கும். லாப சனியினால் வருமானம் அதிகமாக வந்தாலும் விரைய குருவினால் சுப செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆன்மீக பயணம் அதிகம் செல்வீர்கள். ஆலய தரிசனமும் சுப காரிய செலவுகளும் அதிகரிக்கும். ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி குரு பகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் கேது பகவான் ஆறாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யும் காலத்தில் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு சவால்களை வென்று சாதனைகளாக மாற்றுவீர்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராசி அதிபதி சுக்கிரன் உங்களுடைய மனதில் உற்சாகத்தை கொடுப்பார். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் வீடு தேடி வரும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவீர்கள். குரு பகவானின் பயணம் தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கக் செய்யும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு வரப்போகும் விரைய குருவினால் நிறைய சுப செலவுகளும் வந்து போகும். ஆலய தரிசனம் மனம் அமைதியைத் தரப்போகிறது. சொத்து பிரச்சினையில் இருந்த சிக்கல்கள் நீங்கும் லாபம் அதிகரிக்கும். செயல்களில் நிதானம் தேவை. சனி பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும் சம்பள உயர்வும் வரும். 2023ஆம் ஆண்டு இறுதியில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேதுவினால் உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டு நிறைய மாற்றங்களையும் அபரிமிதமான யோகங்களையும் தரப்போகிறது. உங்கள் ராசிநாதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்திசாலித்ததனம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் நடக்கப்போகும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில் ஸ்தான குரு வேலை, தொழிலில் சில மாற்றங்களை ஏற்படுத்துவார். உயரதிகாரிகளிடம் தேவையற்ற பேச்சுகளை வைத்துக்கொள்ள வேண்டாம். சமூகவலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகள் போடுவதை தவிர்க்கவும். சொத்து விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போகிறது. உங்களுக்கு பாக்ய சனி நிறைய பாக்யங்களையும் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார். நிறைய பண வரவும் லாபமும் வரும் கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரப்போகிறது. பதற்றம் படபடப்பு முடிவுக்கு வரப்போகிறது. தொட்டது பொன்னாகும். நீண்ட கால பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அக்டோபர் மாதம் வரைக்கும் ராகு லாப ஸ்தானத்திலும் கேது 5ஆம் வீட்டிலும் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு பத்தம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் பயணம் செய்யப்போகிறார். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ராகு பகவான் பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக ஆண்டாக 2023 ஆம் ஆண்டாக அமையப்போகிறது.

கடகம்
சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு ஏற்றங்களையும் சில மாற்றங்களையும் தரப்போகிறது. சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பேச்சுத்திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். பணிச்சுமை கூடும். ஏப்ரல் மாதம் வரை பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினாலும் குருவின் பார்வையாலும் திருமண யோகமும், கைகூடி வரப்போகிறது. குரு பலன் கிடைக்கும் ஆண்டாக அடைந்துள்ளது. சனிபகவான் கண்டச்சனியாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். வேலை பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை. இந்த ஆண்டு நீங்கள் உங்கள் பயணங்களில் வேகத்தை குறைப்பது நல்லது. வேலையில் அக்கறை காட்டுவது அவசியம். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. எந்த ஒரு விசயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தெளிவான முடிவு எடுப்பது நல்லது.












Click it and Unblock the Notifications