புத்தாண்டு ராசி பலன் 2023: யாருக்கு அரசு வேலை கிடைக்கும்..வேலை பறிபோகாமல் தப்பிக்க பரிகாரம் என்ன?
சென்னை: 2022 ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த சில ஆண்டு காலமாகவே பலருக்கும் சரியான வேலை இல்லை வேலை கிடைத்தாலும் திருப்தியில்லை. இன்றைய கால கட்டத்தில் எப்போது வேலை போகும் என்று பலரும் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பிறக்கப்போகும் புத்தாண்டில் யாருக்கெல்லாம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. கை நிறைய சம்பளத்தில் யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி மே மாதமும் ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதமும் நிகழப்போகிறது. வழக்கம்போல சூரியன் மாதந்தோறும், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையும். நவ கிரகங்களும் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைவதால் பெரிய அளவில் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2022ஆம் ஆண்டு கொரோனாவில் இருந்து தப்பித்து பெருமூச்சு விட்டாலும் பலருக்கும் சாதகமற்ற ஆண்டாகவே அமைந்து விட்டது. திடீரென வேலை பறி போய் விட்டது. பலருக்கும் வேலை நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த ஆண்டு நமக்கு நல்ல வேலை கிடைக்குமா? பார்க்கும் வேலை நிலைக்குமா? என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே.. சனி பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். உங்கள் ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ராகு மேஷத்தில் இருக்கிறார். அச்சங்கள் நீங்கி அற்புதங்கள் நிகழப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். அரசு தேர்வுக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. சனி பகவான் வலிமை பெற்று பயணம் செய்வதால் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கல்வி கற்பீர்கள். வருமானம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்னச் சின்ன தடுமாற்றங்கள் வரலாம் கவனம் தேவை. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் ஸ்தான அதிபதி சனி தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். லாப ஸ்தானத்தில் பயணிக்கும் குரு உங்களுக்கு நல்ல வேலையையும், தொழில் வியாபாரத்தையும் தரப்போகிறார். அரசு துறையில் வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனிபகவான் சாதகமாக பயணம் செய்வதால் நல்ல வேலையை பெற்றுத்தருவார். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு அஷ்டமத்து ஸ்தானத்தில் பயணம் செய்த சனி பகவான் பலரது வேலையை பறித்திருப்பார். பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பார். இனி உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். உயரதிகாரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் முடிவுக்கு வரும். அரசு வேலைக்கு தேர்வுகள் எழுதி அசந்து போயிருப்பீர்கள். உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். 2023ஆம் ஆண்டில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. அரசு வேலையில் அமர்வது நிச்சயம். அதற்கான சாதகமான நேரம் கைகூடி வரப்போகிறது. தனியார் துறையில் வேலையை இழந்தவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் சூரிய காயத்ரியை சொல்லி வணங்க அரசு வேலை கிடைக்கும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..கண்டச்சனியால் கஷ்டப்பட்ட உங்களுக்கு அஷ்டமத்து சனி வரப்போகிறது. வேலையில் சிரமங்கள்... உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் என பல சிக்கல்களை சந்திக்கிறீர்கள். இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கையில் உள்ள வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தால் உள்ளதும் உங்களின் கையை விட்டு போய்விடும் கவனம். குருவின் பார்வை ஏப்ரல் மாதம் வரைக்கும் வேலையை தக்க வைக்கும். தினசரியும் அனுமனை வணங்க வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமர்கிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். அரசு,தனியார் துறையில் வேலை செய்பவர்கள் அதிக கவனமாக இருப்பது அவசியம். யாரை நம்பியும் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எத்தனையோ சிரமங்களைக் கடந்து உயர் பதவிக்கு வந்திருப்பீர்கள் இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் குருவின் பார்வை மே மாதத்திற்குப் பிறகு கிடைப்பதால் வெற்றிகள் தேடி வரும். அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரப்போகிறது.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். சனி பகவானும் சாதகமாக இருப்பதால் உயரதிகாரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உங்களை தொந்தரவு செய்த உயரதிகாரி உங்களை விட்டு வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்வார். அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி தேடி வரும். அனுபவிக்கத் தயாராகுங்கள். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி பெருமாள் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.












Click it and Unblock the Notifications