2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: கும்ப ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்.. பொற்காலம் தேடி வரும்!
சென்னை: ஏழரை சனியின் ஜென்ம சனியின் பிடியில் சிக்கியிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் மனக்கவலைகள் நீங்கும் மகத்தான ஆண்டாக அமையப்போகிறது. இன்னும் சில வாரங்களில் 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு முதல் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படப்போகிறது. நவ கிரகங்களும் இணைந்து என்ன பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.
கும்பம்: உங்களுடைய வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. காரணம் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு செல்லப்போகிறார். ராகு பகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். சனிபகவான் ஜென்ம சனியாக இருந்தாலும் சசமகா யோகத்தை தரப்போகிறார்.

ஜென்ம சனி: ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பவர்களுக்கு பொங்கு சனியாக இருந்தால் உங்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் லாட்டரி மூலம் கிடைக்கப்போகிறது. வரப்போகிற பணத்தை பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். உண்மையான உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
பண விசயத்தில் கவனம்: யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். பண விசயத்தில் கவனமாக இருங்கள். சமூக வலைத்தளங்களில் எழுதும் வார்த்தைகளில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம் ஆபத்தாகி விடும். பண விசயங்களில் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
ராகு கேது: 2024 ஆண்டு முழுவதும் ராகு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானைப் போலவே செயல்படப்போகிறார். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. அதை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. சின்னச் சின்ன வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார்.
குரு பெயர்ச்சி : மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு நல்லதொரு மாற்றம் ஏற்படப்போகிறது. காரணம் குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்து பத்தாம் வீடான வேலை தொழில் ஸ்தானத்தை பார்க்கபோகிறார். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். சுகங்களும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
குரு பார்வை யோகம்: குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். நோய்கள் நீங்கும். தன வருமானம் அதிகரிப்பதால் மன அழுத்தங்கள் நீங்கும். கும்ப ராசிக்காரர்கள் அவசரப்படாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்பட்டால் 2024ஆம் ஆண்டு பொற்கால ஆண்டாக அமையும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications