2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: மகர ராசிக்காரர்களின் மனக்கவலைகள் நீங்கும்.. இனி ஜாக்பாட்தான்!
சென்னை: ஏழரை சனி பாடாய் படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து கவலையோடு இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் விடிவு காலம் பிறக்கப்போகிறது. இன்னும் சில வாரங்களில் 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டில் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு மனக்கவலைகள் நீங்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் இனி நீங்கப்போகிறது. ஏழரை சனி படிப்படையாக முடிவுக்கு வரப்போகிறது. பாத சனி நடந்தாலும் சனி பகவான் கொடுத்த சோதனைகளை தாங்கி வைரம் பாய்ந்த கட்டையாக மாறியிருப்பீர்கள். வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.

பண வருமானம்: கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கும் குரு பகவான் மே மாதம் முதல் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. கவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருந்தாலும் புரமோசனும் சம்பள உயர்வும் இல்லையே என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது.
மன அழுத்தம் நீங்கும்: தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிலர் நொடிந்து போயிருப்பீர்கள். இனி தொழில், வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். தொட்டது துலங்கப்போகும் பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபத்தை தரப்போகிறது. 2024ஆம் ஆண்டு முதல் உங்களின் மன அழுத்தம் நீங்கும் மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சுப காரியம்: இளைஞர்களுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும். திருமணம் நடந்து பிள்ளை பாக்கியம் இல்லை என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு வைகாசி மாதத்தில் இருந்து வரமாக குழந்தை கிடைக்கப்போகிறது. படித்து விட்டு நீண்ட நாட்களாக நல்ல வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் விரும்பிய இடத்தில் இருந்து இண்டர்வியூ தேடி வரும். வரப்போகும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சனிபகவான்: இரண்டாம் வீட்டில் சனி பகவான் ஆண்டு முழுவதும் பயணம் செய்வதால் பொதுவாகவே பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். பேச்சில் கோபத்தை கட்டுப்படுத்தி இனிமையை கூட்டுங்கள். உயரதிகாரிகள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள். எதிர்த்து பேசி வம்பு வழக்குகளில் மாட்டிகொள்ளாதீர்கள். பணிவாக இருங்கள் ஏனென்றால் ஏழரை சனி காலத்தில் பணிவாக இருப்பவர்களை சனிபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வார். ஆணவத்தில் ஆடும் நபர்களைத்தான் தலையில் தட்டி அமர வைத்து விடுவார் சனிபகவான்.
ராகு கேது: ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கேது பகவான் பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டிலும் 2024ஆம் ஆண்டு முழுவதும் பயணம் செய்வதால் இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தையும் வசதியான வாழ்க்கையையும் சனி பகவான் அள்ளித்தரப்போகிறார். ஆன்மீக பயணங்கள் அதிகம் செய்யப்போகிறீர்கள். கோவில் கோவிலாக சென்று இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு வரப்போகிறீர்கள். அந்த அளவிற்கு வருமானத்தையும் வசதி வாய்ப்புகளையும் தரப்போகின்றனர் ராகுவும் கேதுவும். மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு பொற்காக ஆண்டாக அமையப்போகிறது. இந்த ஆண்டு முழுவதும் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications