2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: மீன ராசிக்காரர்களின் கொடி பறக்கும்.. பண விசயத்தில் உஷார்!
சென்னை: விரைய சனி.. ஜென்ம ராகுவின் பிடியில் சிக்கியிருக்கும் மீனம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. மீன ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களும் இணைந்து 2024 ஆம் ஆண்டில் என்ன பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.
மீனம்: ராசியில் இருக்கும் ராகு உங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்போகிறார். ஜென்ம ராகுவாக இருந்தாலும் அவர் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் அற்புதங்கள் நிகழப்போகிறது. 12ஆம் வீட்டில் உள்ள விரைய சனி 2024ஆம் ஆண்டு முழுவதும் நீடிப்பதால் எவ்வளவு காசு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கும்.

ராஜயோகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் எப்ரல் மாதம் வரை பயணம் செய்வதால் நிறைய பண வருமானம் வரும். மே மாதத்தில் இருந்து குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்குமே குரு பகவான் உங்களுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை தரப்போகிறார். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரப்போகிறது.
கவனம்: இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு மற்றொரு வேலைக்கு ஆசைப்படாதீர்கள் பாதியில் விட்டு விட்டு போய்விடுவார்கள். இருக்கிற தொழிலை விட்டு விட்டு புதிய தொழில் தொடங்காதீர்கள். உங்களை தொங்கவில் விட்டு விட்டு போய் விடும். எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். நமக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புத்தாண்டு நல்ல செய்தியை தரப்போகிறது.
பணம் பத்திரம்: இன்னும் ஓராண்டு காலத்தில் ஜென்ம சனி வரப்போவதால் நீங்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். ஆட்டம் காண ஆரம்பித்து விடும். பண விசயத்தில் யாரையும் நம்பி விடாதீர்கள். குறிப்பாக ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை யாருக்கும் கடனாகத்தர வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள் யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது.
ஆரோக்கியத்தில் அக்கறை: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பங்குச்சந்தையில் பணத்தை முலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதையும் கவனத்தோடு கண்காணியுங்கள். காதலிப்பவர்களுக்கு நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது. திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. நீங்கள் விரும்பியது தேடிவரப்போகிறது. வாழ்க்கை துணையால் வெற்றிகள் தேடி வரப்போகிறது. புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் தேவையற்றவர்களைப் பேசி நஷ்டப்பட வேண்டாம்.
தெரியாதவர்களை நம்பி புதிய தொழில் தொடங்காதீர்கள். கூட்டுத்தொழில் இப்போதைக்கு தேவையில்லை. மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு உங்களுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுத்தாலும் அதை கவனமாக கையாளுங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications